இன்றைய ராசி பலன்
மேஷம் (Aries)

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிலுவையில் இருந்த தொகைகள் வசூலாகும். புதிய வருமான வாய்ப்புகள் தேடி வரும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் நாள்.
பரிகாரம்: சூரிய பகவானுக்குரிய ‘ஆதித்ய ஹிருதயம்’ கேட்கவும் அல்லது சொல்லவும்.
ரிஷபம் (Taurus)

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பொன், பொருள் சேர்க்கைக்கான வாய்ப்புகள் உண்டு. மன அமைதி கிடைக்கும் நாள்.
பரிகாரம்: பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது பழங்கள் வழங்கவும்.
மிதுனம் (Gemini)

திட்டமிட்ட காரியங்கள் முடிவதில் சற்று கால தாமதம் ஏற்படலாம். கால்களில் அசதி அல்லது உடல் சோர்வு வந்து நீங்கும். பொறுமையுடன் செயல்படுவது இன்று அவசியம்.
பரிகாரம்: மகாவிஷ்ணுவை வழிபடவும்; “ஓம் நமோ நாராயணாய” மந்திரத்தைச் சொல்லவும்.
கடகம் (Cancer)

இன்று எதிலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். புதிய நபர்களிடம் ரகசியங்களைப் பகிர வேண்டாம். வாகனப் பயணங்களில் மிகுந்த கவனம் தேவை.
பரிகாரம்: துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட பயம் நீங்கும்.
சிம்மம் (Leo)

வாழ்க்கை வசதிகள் பெருகும். அதே சமயம் வெளி நபர்களால் அல்லது உறவினர்களால் சிறு மன சங்கடங்கள் ஏற்படலாம். பிறர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
பரிகாரம்: சூரியனார் கோவிலை மனதார நினைத்து வழிபடவும்.
கன்னி (Virgo)

தொட்டதெல்லாம் துலங்கும் நாள். எதிர்பாராத இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கும்.
பரிகாரம்: புதன் பகவானை நினைத்து ஏழைகளுக்குப் பச்சைப்பயறு தானம் செய்யவும்.
துலாம் (Libra)

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படலாம். பண விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை, எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும்.
பரிகாரம்: மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
விருச்சகம் (Scorpio)

தேவையற்ற வாக்குவாதங்களால் உறவினர்களுடன் பகை ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். பேச்சில் நிதானம் தேவை.
பரிகாரம்: முருகப்பெருமானுக்குச் செவ்வரளி மலர் சாற்றி வழிபடவும்.
தனுசு (Sagittarius)

இன்று உங்களுக்குப் பொற்காலம். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல் மற்றும் மன ரீதியாக மிகுந்த மகிழ்ச்சியையும் சுகத்தையும் அனுபவிப்பீர்கள்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களைச் சாற்றி வழிபடவும்.
மகரம் (Capricorn)

சுபச் செலவுகளோ அல்லது வீண் விரயங்களோ இன்று ஏற்படலாம். கையில் இருக்கும் பணத்தை செலவழிக்கும் முன் பட்ஜெட் போட்டுச் செயல்படுவது நல்லது.
பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடவும்.
கும்பம் (Aquarius)

உடல் சோர்வு அல்லது பழைய நோய்கள் சற்று தலைதூக்கலாம். தேவையற்ற மனக்கவலைகள் வந்து நீங்கும். போதுமான ஓய்வு எடுப்பது அவசியம்.
பரிகாரம்: சிவபெருமானுக்கு வில்வ இலை சாற்றி வழிபட மன அமைதி கிடைக்கும்.
மீனம் (Pisces)

பொருளாதார ரீதியாகச் சற்று நெருக்கடியான சூழல் நிலவும். மனதிற்குப் பிடிக்காத சில சம்பவங்களால் வருத்தம் ஏற்படலாம். அமைதி காப்பது அவசியம்.
பரிகாரம்: ராகவேந்திரர் அல்லது சாய் பாபாவை வழிபட துன்பங்கள் நீங்கும்

