இன்றைய நாள் சிறப்பு -ஆடி கிருத்திகை ஜூலை 29, திங்கள்

Spread the love

ஆடி கிருத்திகை

ஆடி மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ‘ஆடி கிருத்திகையாகும்’. கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருப்பது மிகவும் நல்லது. அதிலும் ஆடிக் கிருத்திகையன்று விரதம் இருந்தால், எல்லாவிதமான தோஷங்களும் நிவர்த்தியாகும்.

சிவபெருமானின் அருளால் தோன்றிய முருகப் பெருமான், கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டார்.அந்தக் கார்த்திகை பெண்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்கள் ஆறுபேரும் கார்த்திகை நட்சத்திரங்களாக மாறி அன்றைய தினத்தில் முருகப் பெருமானை வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.

ஆடி கிருத்திகை

வருடத்தில் தை கிருத்திகை, ஆடிக் கிருத்திகை என்ற இரு நாட்களும் சிறப்பானதாகும். வீட்டையும், பூஜை அறையையும் முழுமையாகத் துடைத்து சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பூஜையறையில் முருகப் பெருமானின் திருவுருவப் படத்திற்கு பூக்களால் அலங்காரம்
செய்து, மற்ற தெய்வங்களின் திருவுருவப் படத்திற்கு புதியதாகப் பூக்களைச்சூட்டி, முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அறுகோண கோலம் இட வேண்டும். பின்பு முருகனின் படத்திற்கு இருபுறமும் நெய் தீபமேற்றி, பழங்களை நிவேதனம் வைத்து, பூஜையறையில் அமர்ந்து உணவு, நீர் என எதுவும் அருந் தாமல் கந்த சஷ்டி கவசம் அல்லது சண் முக கவசத்தை மனமொன்றி படிக்க வேண்டும்.

முருகப் பெருமானுக்குச் சர்க்கரைப் பொங்கலை நெய், முந்திரிப் பருப்பு, ஏலக்காய் சேர்த்து நிவேதனமாக வைக்கலாம். தூப தீராத கஷ்டத்தைத் தீர்த்து வைத்து, சகல செல்வங்களும் அள்ளித்தரும் இந்த ஆடி மாத கார்த்திகை விரதம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top