அஷ்டமி
முழுமையாக கெட்ட நாட்களாக கருத முடியாது. புதிதாக துவங்கும் பணிகளை அஷ்டமி, நவமியில் செய்யக்கூடாது. மாறாக அன்றாடம் செய்து கொண்டிருக்கும் பணிகளையும், ஏற்கனவே துவங்கிய ஒரு பணியின் தொடர்ச்சியையும் அஷ்டமி, நவமி நாட்களில் செய்யலாம்.
இந்த இரண்டு நாட்களும் வளர்பிறை, தேய்பிறை என்று சொல்லப்படுகின்ற ஒரு பக்ஷத்தின் நடுப்பாகத்தில் வருபவை. வானவியல் ரீதியாக சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே இருக்கக்கூடிய தூரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதே இந்த இரண்டு நாட்களும் ஆகும்.
சந்திரனை நாம் மனோகாரகன் என்று அழைக்கிறோம். அஷ்டமி, நவமி திதிகளின் காலத்தில் சந்திரன் முழுமையாக வெற்றியைத் தருகின்ற வகையில் செயல்பட முடியாது என்பதால், அதாவது நம்முடைய மனதின் முழுமையான நேர்மறை எண்ணங்கள் உதிக்காது என்பதால் இந்த நாட்களில் சுப நிகழ்ச்சிகள் செய்வதை தவிர்த்தார்கள் நம் முன்னோர்கள்!