மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை)
ஜென்ம ராசியில் ராகுவும், திருதீயராசியில் (3) குருவும், ஸப்தம (7) ஸ்தானத்தில் கேதுவும் இம்மாதத்தில் அமர்ந்துள்ளனர்!
சனி பகவானும், விரய ஸ்தானத்தில், வக்கிர கதியில் வலம் வருகின்றார் !!! வீண் கவலைகளும், குடும்பத்தில் ஒற்றுமையின்மையும், முயற்சிகளில் ஏற்படும் தடங்கல்களும், மனதில் விரக்தியை உண்டுபண்ணும். கைப்பணம் எங்கே போயிற்று? என்று அதிசயிக்கும் வண்ணம் பணம் விரயமாகும்.

சிறு விஷயங்களுக்குக்கூட அதிகமாக பாடுபடவேண்டியிருக்கும். தேவையில்லாமல், வெளியில் அலைவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி ஏதாவதொரு உடல் உபாதைகள் ஏற்பட்டு, மருத்துவரை நாடவேண்டிய கட்டாயம் ஏற்படும்.
சனி பகவானின் வக்கிர கதியினால் ஏற்படும் ஆரோக்கியக் குறைவு, அலுவலகப் பணிகளிலிருந்து சில நாட்கள் ஓய்வில் செல்ல மனம் விழையும். காரணமில்லாமல், எதிர்காலத்தைப் பற்றிய கவலை மனதை அரிக்கும். நெருங்கிய உறவினர்களுடன் ஒற்றுமை குறையும். மன நிம்மதியும் பாதிக்கப்படும்.
பரிகாரம்:
ஏழை ஒருவரை வீட்டுக்கு அழைத்து பாத பூஜை செய்து உணவு அளிக்கவும்.