பங்குனி மாத முக்கிய விசேஷ தினங்கள் -2024

Spread the love

பங்குனி

பங்குனி 01 (14-03-2024) :காரடையான நோன்பு

விரதம் மதியம் 12.00 வரை. புது மாங்கல்யச் சரடு மாற்றிக்கொள்ள சுப முகூர்த்த நாள் 10.30 முதல், பகல்12.00 வரை ஆகும்.

பங்குனி 02 (15-03-2024) :சஷ்டி மற்றும் கார்த்திகை விரதம்.
பங்குனி 12 (25-03-2024) :பங்குனி உத்திரம்

பூரண சந்திர ஒளியுடன் பிரகாசிக்கும் பௌர்ணமியுடனும், தமிழ் மாதக் கடைசி – 12வது மாதமாகிய பங்குனியும், 27 நட்சத்திரங்களில் 12-வது இடத்தை வகிக்கும் உத்திரநட்சத்திரமும் இணையும் காலத்தையே பங்குனி உத்திரம் எனக் கொண்டாடப்படுகிறது.

மிகப் பெரும் புண்ணிய பலனைத் தரவல்லதும், சகல நலன்களையும்,
காரிய சித்தியை அருள வல்லதும், பணக் கஷ்டம், திருமணத் தடைகள், வாராக் கடன், ஆரோக்கியக் குறைவு போன்ற அனைத்துவிதத் தடைகளையும் நீக்கி, அனைத்துவித அபிலாஷைகளையும் நிறைவேற்றச் செய்து, வாழ்வில் வசந்தம் வீசச் செய்யும் புனித தினமே பங்குனி உத்திரம்.

யோக பயிற்சி செய்வதற்கும், தான – தர்மங்களைச் செய்ய, அவை
பன்மடங்காகப் பெருகி, அபரிமிதமான பலன்களை அளிக்க வல்லதுமான நாள் இந்தப் பங்குனி உத்திரம். இந்நன்னாளில் சுப காரியங்களைத் தொடங்குவது மிகவும் உத்தமமாகும். அன்று நிகழ்ந்த தெய்வத் திருமணங்களாகிய பார்வதி பரமேஸ்வரர், தசரத குமாரர்களாகிய ராம -சீதா கல்யாணம், பரதன் – மாண்டவி, லட்சுமண-ஊர்மிளை, சத்ருக்கனன் -ஸுதகீர்த்தி, ஆண்டாள்-ரெங்கமன்னார், முருகன் – தெய்வானை, நந்தி – சுயசை, ஆகிய தெய்வங்களின் திருமணங்களும் இந்தப்பங்குனி உத்திரத்திருநாளில்தான் என்றால், இம்மாதத்தின் தெய்வீகச் சிறப்பிற்கு, வேறு சான்றுகளும் வேண்டுமா ?! திருமகள், திருமார்பை
அலங்கரித்ததாலே, “அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை
உறை மார்பன்” எனப் பூஜிக்கப்படும் தினமும், வெள்ளைத் தாமரையில்
வீற்றிருக்கும் நான்முகனின் நாவில் எழுந்தருளிய கலைமகள்
தினமும் இன்றுதான்! ஆதலால்தான், பங்குனியை “கல்யாண மாதம்” எனக் கூறுவர் பெரியோர். மேலும், சபரிமலை ஐயப்பனின் அவதார தினமும் இந்தப் பங்குனி உத்திரத்தில்தான்!

பங்குனி 12 (25-03-2024) :ஹோலிப் பண்டிகை

பக்தர்களில் உயர்ந்து விளங்கும் பிரகலாதனின் தந்தையான இரணியகசிபுவின் இளைய சகோதரி “ஹோலிகா”. இவளும் அசுர குணம் கொண்டவளே இரணியன்,தன் குழந்தை பிரகலாதனைக் கொல்ல முயற்சித்தபோது, தன் சகோதரனின் தீய செயலுக்கு உடந்தையாக, பாலகன் பிரகலாதனைக் கொல்ல முயன்றபோது, தீக்கு பலியானாள், ஹோலிகா இறந்த தினமே. ஆண்டுதோறும் இந்தப்பங்குனி மாதத்தில் “ஹோலி பண்டிகை” எனக் கொண்டாடப்படுகிறது.

பங்குனி 15 (28-03-2024) : சங்கடஹர சதுர்த்தி
பங்குனி 24 (06-04-2024) :சனிப் பிரதோஷம்
பங்குனி 25 (07-04-2024) : மாத சிவராத்திரி
பங்குனி 26 (08-04-2024) : சர்வ அமாவாசை
பங்குனி 27 (09-04-2024) : தெலுங்கு வருடப் பிறப்பு – யுகாதிப் பண்டிகை.

பூமி காரகரான செவ்வாய் தோஷமனைத்தையும் போக்கும்
லட்சுமி நரசிம்மருக்கு உகந்த தினம். செவ்வாய் பகவானின் ஆட்சிவீடாகிய மேஷராசிக்குச் சந்திரன் பிரவேசிக்கும் நட்சத்திரங்களில் முதன்மை ஸ்தானத்தைப் பெற்ற அஸ்வினியுடன் கூடும் நன்நாளையே பௌமாஸ்வினி நன்னாள் எனக் கொண்டாடுகிறோம். இந்தத் தினத்தில், லட்சுமி நரசிம்மரின் திருவுருவப் படத்தை எழுந்தருளச் செய்து, துளசி இதழ்களால் அர்ச்சித்து, வெல்லம், சுக்கு, ஏலக்காய், தண்ணீருடன் கலந்த பானகம் அமுது செய்வித்தால், சகல வித நன்மைகளும் உங்களை வந்தடைவது திண்ணம்.

பங்குனி 29 (11-04-2024) :கார்த்திகை விரதம்

நவக்கிரகங்களில், “குரு பார்க்கில் கோடி நன்மை” என்ற சொற்றொடர்களை மெய்ப்பிப்பதிலும், குரு பகவானின் சகல தோஷங்களைப் போக்குவதில் வல்லதுமான தாரா தேவி ஜெயந்தி.

பங்குனி 30 (12-04-2024) : சதுர்த்தி விரதம்
பங்குனி 31 (13-04-2024) :வசந்த பஞ்சமி – லட்சுமி பஞ்சமி.

லட்சுமி கடாட்சம் உண்டாவதற்கும், சகல சம்பத்துக்களுடன், 16 வகையான செல்வங்களையும் மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும் வாழ்ந்திடவீட்டில் கலசம்வைத்துபூஜித்து, கனகதாரா ஸ்தோத்திரம், மஹாலட்சுமி ஸ்தோத்திரம் – அஷ்டோத்திரம், பாராயணம் செய்வது மகத்தான புண்ணிய பலனைத் தரவல்லது. தேவி பாகவதம், திருக்கோயிலுக்குச் சென்று, ஒன்பது மண் அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றிவைப்பதும், கர்ப்பக்கிரகத்தில் எரியும் தூண்டா விளக்கில் சிறிது நெய் சேர்ப்பதும் மகத்தான புண்ணிய பலனைத் தரவல்லது. இன்றைய தினம் கருட பகவானை தரிசித்தால், சகல பாவங்களும்விலகி, அனைத்துவித நன்மைகளும் உண்டாகும். எதிரிகள் விலகுவர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top