இன்றைய ராசி பலன் :04 மே 2026

இன்றைய ராசி பலன்

மேஷம் (Aries)

இன்றைய ராசி பலன்

இன்று அறிமுகமில்லாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பயணங்களின் போது உடைமைகளைத் தகுந்த பாதுகாப்புடன் வைத்துக்கொள்வது நல்லது. தேவையற்ற அச்சத்தைத் தவிர்த்து மன உறுதியுடன் செயல்படவும்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட நன்மைகள் உண்டாகும்.

ரிஷபம் (Taurus)

இன்றைய ராசி பலன்

வாழ்க்கை வசதிகள் பெருகினாலும், மனதில் ஏதோ ஒரு சிறு சங்கடம் நிலவும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து அமைதி காப்பது இன்று உங்களுக்குச் சாதகமாக முடியும்.

பரிகாரம்: மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட சங்கடங்கள் விலகும்.

மிதுனம் (Gemini)

இன்றைய ராசி பலன்

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாள். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் அல்லது உறவினர்களின் சந்திப்பு மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்.

பரிகாரம்: பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசி தீர்த்தம் அருந்தவும்.

கடகம் (Cancer)

இன்றைய ராசி பலன்

இன்று எடுக்கும் முயற்சிகளில் சிறு பின்னடைவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். மற்றவர்களை நம்பிப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

பரிகாரம்: விநாயகப் பெருமானுக்குச் சிதறு காய் உடைத்து வழிபடத் தடைகள் நீங்கும்.

சிம்மம் (Leo)

இன்றைய ராசி பலன்

அக்கம்பக்கத்தினர் அல்லது உடன் பணிபுரிபவர்களிடம் பகை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை; குறிப்பாக உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும்.

பரிகாரம்: சூரிய பகவானை நோக்கி வணங்கி, ஆதித்ய ஹிருதயம் வாசிக்கவும்.

கன்னி (Virgo)

இன்றைய ராசி பலன்

பொருளாதார ரீதியாகச் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் சுப செய்திகள் வந்து சேரும், உடல் ஆரோக்கியம் மேம்படும்.

பரிகாரம்: பச்சை நிற ஆடை அணியவும் அல்லது ஏழைகளுக்குப் பச்சைப்பயறு தானம் செய்யவும்.

துலாம் (Libra)

இன்றைய ராசி பலன்

வீண் செலவுகள் வந்து சேரும் நாள். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். சேமிப்பில் கை வைக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்பதால் சிக்கனம் தேவை.

பரிகாரம்: துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடவும்.

விருச்சகம் (Scorpio)

இன்றைய ராசி பலன்

உடல் அசதி மற்றும் மனச்சோர்வு ஏற்படலாம். தேவையற்ற விஷயங்களை நினைத்துத் தூக்கத்தைத் தொலைக்க வேண்டாம். சரியான நேரத்திற்கு உணவருந்தி ஓய்வெடுப்பது நல்லது.

பரிகாரம்: முருகப்பெருமானுக்குச் செவ்வரளி மலர் சாற்றி கந்த சஷ்டி கவசம் வாசிக்கவும்.

தனுசு (Sagittarius)

இன்றைய ராசி பலன்

மனதிற்கு வருத்தம் தரும் செய்திகள் வரலாம். எடுக்காத முடிவுகளுக்காக மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும். நிதானமாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டிய நாள்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்யவும்.

மகரம் (Capricorn)

இன்றைய ராசி பலன்

தொழில் மற்றும் பணியிடத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் தேடி வரும். நிலுவையில் இருந்த பணத்தொகை வசூலாகும்.

பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடவும்.

கும்பம் (Aquarius)

இன்றைய ராசி பலன்

குடும்பத்துடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உற்சாகம் அடைவீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானுக்குப் பால் அபிஷேகம் அல்லது வில்வ இலை சாற்றி வழிபடவும்.

மீனம் (Pisces)

இன்றைய ராசி பலன்

திட்டமிட்ட காரியங்கள் முடிவதில் சுணக்கம் ஏற்படும். கால் வலி அல்லது உடல் நலிவு ஏற்படலாம். எதிலும் அவசரம் காட்டாமல் மெதுவாகச் செயல்படுவது வெற்றியைத் தரும்.

பரிகாரம்: குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top