ஆவணி மாத ராசி பலன்கள் – மிதுன ராசி

மிதுன ராசி

இம்மாதம் முழுவதும் சூரியன், சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர். புதன் ஆவணி 14-ம் தேதி வரை அனுகூலமாக உள்ளார். அதன் பிறகு மாறி விடுகிறார்.

மற்ற கிரகங்களினால் எவ்வித நன்மையும் எதிர்பார்க்க இயலாது. சுக்கிரனின் நிலையினால் வருமானம் போதிய அளவிற்கு இருக்கும். இருப்பினும்,சேமிப்பிற்கு வாய்ப்பு இல்லை.

குருவும், செவ்வாயும் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் விவாக முயற்சிகளில் வரன் அமைவது சற்று கடினம். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக உள்ளது.

மிதுன ராசி

சனிபகவானும் விரய ஸ்தானத்தில் குருவும், செவ்வாயும் அமர்ந்திருப்பதால் எதிர்பாராத செலவுகளில் பணம் விரயமாகும். சில தருணங்களில் புதிய கடன்களை ஏற்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் உணர்த்துகின்றன. நெருங்கிய உறவினர்களிடையே ஒற்றுமை குறையும்.

பரிகாரம் :

அருகில் உள்ள திருக்கோயில் ஒன்றில் சனிக்கிழமைகளில், மாலையில் தீபத்தில் சிறிது எள் எண்ணெய் சேர்த்து வந்தால் போதும். ஒவ்வொரு துளி என்னைக்கும் அளவற்ற பரிகார தோஷ நிவர்த்தி, சக்தி உள்ளதை மிகப் புராதனமான ஜோதிட நூல்களில் விவரித்துள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top