மேஷம்
(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
குரு பகவான் ராசிக்கு தனஸ்தானத்தில் சுப பலம் பெற்று விளங்குவதால், இம்மாதம் முழுவதும் பணப் பற்றாக்குறை இராது!! குடும்பச் சூழ்நிலை நிம்மதியைத் தரும். ஆவணி 10-ந் தேதி வரை சுக்கிரனும் அனுகூலமாக சஞ்சரிப்பதால், திருமண முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
வக்கிர கதியில் சனி பகவான் லாப ஸ்தானத்தில் நிலைகொண்டிருப்பதால், வீண் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். வெளிநாட்டில் பணியாற்றிவரும் பிள்ளை அல்லது பெண்ணின் வருகை, மகிழ்ச்சியை அளிக்கும்.
விரய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கும் நிலையில், ஆவணி8-ம் தேதி வரை, செவ்வாய் அனுகூலமாக இல்லாததால், மாதத்தின் முதல் வாரத்தில் ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
தேவையில்லாமல் அலைவதையும், தரக்குறைவான உணவகங்களில் உண்பதையும், பிறருடன் வாக்குவாதம் செய்வதையும் தவிர்ப்பது மிகவும் அவசியம்.
இம்மாதத்தின் கடைசி வாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட இருப்பதால், மாதத்தின் ஆரம்பத்திலிருந்தே சற்று சிக்கனமாக இருக்க வேண்டும் என்பதை கிரக நிலைகள் முன்கூட்டியே உணர்த்துகின்றன.
குரு – செவ்வாய் ஆகிய இருவரின் சஞ்சார நிலைகள் குரு மங்கள் யோகத்தை ஏற்படுத்துவதால், புதிய வீடு அல்லது நிலம் வாங்கும் யோகமும் அமைந்துள்ளது.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமை தோறும் அருகில் இருக்கும் ஆலயங்களுக்கு சென்று தரிசித்து விட்டு வந்தால் போதும்.