புகழ் சோழ நாயனார் குருபூஜை
புகழ்ச் சோழன் என்பது, சிவபக்தி யால் புகழ்பெற்ற சோழன் என்று பொருள்படும். கருவூரைத் தலைநகராகக் கொண்டு (இன்றைய கரூர்) ஆண்ட மன்னன் இவர். சிவனிடத்திலும் சிவன் அடியாரிடத்தும் எல்லையற்ற அன்பும் பக்தியும் கொண்டு அவர்களுக்குத் தொண்டு செய்வதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர்.
கருவூரில் உள்ள சிவாலயம் ஆனிலை. அங்கே உள்ள இறைவனின் திருநாமம் பசுபதீஸ்வரர். இந்த ஆலயத்தொண்டைதூயமனத் தினனாய் தொடர்ந்தார் இந்நிலையில் பல்வேறு மன்னர்களை வென்ற புகழ் சோழன், தனக்கு திரை செலுத்தாமல் இருந்த அதிகன் என்ற மன்னனை வென்று வரதன் படைகளை அனுப்பி னார். அந்தப் படைகளும் அதிகனை வென்றது. அவர்கள் அங்கிருந்து பல்வேறு விதமான பொன் பொருள்களைஎடுத்துக் கொண்டு புகழ்ச் சோழனைக் காண வந்தனர்.
அப்பொழுது போரில் வெல்லப்பட்ட அதிகனின் தலையையும் காணிக்கையாகக் கொண்டு வந்தனர். அந்தத் தலையைப் பார்த்த புகழ்ச் சோழன் அது சடா முடியாக இருக்கக் கண்டு ஒரு சிவனடியாரை கொன்றுவிட்டோமே என்று எண்ணி மனம்துடித்தார்.பதை பதைத்தார்.
பெரும் பிழை நடந்து விட்டது என்று மனம் வெதும்பினார். ஒரு சிவனடியாரைக் கொன்ற நான் சிவத் துரோகம் செய்துவிட்டேன். இனியும் நான் உயிர் வாழ்வதில் பொருள் இல்லை. இப்படி எண்ணிய உடனே தன்னுடைய மைந்தனுக்கு அரசாட்சியை தந்துவிட்டு. தீ வளர்த்து, அந்தத் தீயில் புகுந்தார். அறியாமல் செய்த தவறுக்கு பிராயச் சித்தம் தேடிக் கொண்டார்.
சிவபக்தியின் உச்சத்தில் இச்செயலைச் செய்த புகழ்ச்சோழ நாயனாரின் குருபூஜை தினம் ஆடி மாதம் கார்த்திகை நட்சத்தி ரம் (அதாவது இன்று) பெரும்பாலான சிவாலயங்களிலும் சைவ மடங்களிலும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.