இன்றைய நாள் சிறப்புகள்
சகல தோஷங்களையும் நீக்குவது பிரதோஷ விரதம்.(பிற தோஷங்களை நீக்கும் பிரதோஷம்). பாற்கடலை கடைந்த போது திரண்டு வந்த விஷத்தை சிவபெருமான் உண்டு இந்த உலகத்தை காப்பாற்றி ‘நீலகண்டன்’ என்ற பெயரைப் பெற்ற காலம் தான் பிரதோஷம்.
இந்த பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து, சிவபெருமானை பூஜிப்பவர்கள் விஷம் போன்ற துன்பங்களிலிருந்து விடுபடுவார்கள். பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து சிவனையும், நந்தியையும் தரிசனம் செய்வதன் மூலமாக சகல பாவங்களும் விலகி நன்மை உண்டாகும்.
பிரதோஷ நாளில் முன்னோர்களை முன்னிட்டு மாலை நேரத்திலே எம தீபம் வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவது சிறப்பானதாகும். இதனால் முன்னோர்கள் மட்டும் இன்றி கால தேவன் மகிழ்ச்சி அடைவான்.
ஜாதகத்தில் இருக்கக்கூடிய அட்டமதோஷங்களான விபத்துக்கள், திடீர் மரணம் முதலிய ஆபத்துகள் சம்பவிக்காது. நோய் நொடியின்றி நீண்ட வாழ்க்கையை வாழலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.