இன்றைய நாள் சிறப்பு – மூர்த்தி நாயனார் குருபூஜை, ஜூலை 30, செவ்வாய்

Spread the love

மூர்த்தி நாயனார் குருபூஜை

63 நாயன்மார்களில் ஒருவர் மூர்த்திநாயனார். வணிக மரபில் வந்தவர் அற்புதமான சிவபக்தர் மதுரை சுந்தரேஸ்வரருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்ய இடைவேளை இன்றி தினமும் சந்தனக் கட்டையை வழங்கும் சேவையை மேற்கொண்டவர். அப்பொழுது மதுரை மீது படையெடுப்பு நடந்து மதுரை நகரம் சமண மதத்தைச் சார்ந்த மன்னர்களுக்கு வசப்பட்டது. ஆயினும், மூர்த்தி நாயனார் தன்னுடைய சேவையைத் தொடர்ந்து கொண்டிருந்தார். இவருடைய சேவையைத் தடுக்க வேண்டும் என்பதற்காக அரசாங்க ஊழியர்கள் சந்தனக் கட்டையை கிடைக்கவிடாமல் செய்தனர். எத்தனை முயன்றும் இறைவனுக்கு சந்தன அபிஷேகத்துக்கு உதவ முடியவில்லை. இதை எண்ணி மனம் துடித்த மூர்த்தி நாயனார் சந்தனத்தை அரைக்க பயன்படுத்தும் கல்லில் தம்முடைய கைகளை அரைத்தார்.

மூர்த்தி நாயனார் குருபூஜை

அவருடைய தோல் உரிந்தது. எலும்புகளும் நரம்புகளும் வெளிப்பட்டன. இதனைக் கண்டு பொறுக்க முடியாத இறைவன். அவரைத் தடுத்தான். அதே நேரம், இவருடைய தொண்டினைத் தடுத்த மன்னன்.வாரிசு இன்றி இறந்தான். புதிய மன்ன னைத் தேர்ந்தெடுக்க பட்டத்து யானை மாலையுடன் வலம் வந்தது. மயங்கி கிடந்த மூர்த்தி நாயனாரின் கழுத்தில் மாலையைப் போட அவர் அரசபட்டத்தை ஏற்றுக் கொண்டார். சைவப் பணியும் தொண்டும் தொடர்ந்தது. சிவன் அருள் பெற்ற மூர்த்தி நாயனாரின் குரு பூஜை இன்று.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top