பிரபோதன ஏகாதசி -12.11.2024
இந்த ஏகாதசிக்கு பிரபோதன ஏகாதசி என்று பெயர். ஏகம் + தசி, “ஏகாதசி” ஏகம் என்றால் ஒன்று, தசி என்றால் பத்து, எனவே “ஏகாதசி” எனப்படுகிறது. சயன ஏகாதசி, பரிவர்த்தனை ஏகாதசி, உத்தான ஏகாதசி என்னும் பிரபோதன ஏகாதசி, ஸ்ரீவைகுந்த ஏகாதசி என்ற இந்த நான்கு ஏகாதசி களையும் வைணவம் சிறப்பாகப் போற்றும்.
இந்த நாளில் துளசியால், பெருமாளை பூஜை செய்பவர்கள் வைகுண்டம் செல்வார்கள். துளசியைத் தரிசிப்பது, துளசியைத் தொடுவது, துளசியின் பெயரைச் சொல்வது, துளசியைத் துதிப்பது, துளசியை நட்டு வளர்ப்பது, துளசிக்குத் தண்ணீர் விடுவது, துளசியை பூஜை செய்வது என எதைச் செய்தாலும், பல யுகங்கள் வைகுண்ட வாசத்தை அளிக்கும் ஏகாதசி இது.
மூவுலகங்களிலும் கிடைக்கப்பெறாத பொருளும், ப்ரபோதினி ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கப்பெறும். ப்ரபோதினி ஏகாதசி விரதத்தின் பலனால் பாபங்களில் மிகவும் பெரிய பாபமும் க்ஷண நேரத்தில் நஷ்டமடைகிறது.
ப்ரபோதினி ஏகாதசியன்று இரவில் கண்விழித்து விரதத்தை அனுஷ்டிப்பவரின் பத்து தலைமுறை மூதாதையர் மற்றும் எதிர்கால சந்ததியினர் விஷ்ணுலோகம் அடைந்து வாசம் செய்யும் பாக்கியத்தை பெறுகின்றனர்.
நரகத்தில் அனேக துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக் கும் அவருடைய பித்ருக்களும் விடுதலை அடைந்து விஷ்ணுலோகம் அடைந்து சுக வாழ்வு பெறுவர். இந்த ஏகாதசி நாளன்று பகவானின் அருள் வேண்டி எவர் ஒருவர் தானம், தவம், ஜபம், ஹோமம், யக்ஞம் ஆகியவற்றை செய்கிறாரோ, அவர் என்றும் குறையாத புண்ணிய பலனை பெறுகிறார்.