சந்திர தரிசனம்
வாழ்வில் முன்னேற்றம் இல்லையா? பணம் பற்றாக்குறையா? கடன் தொல்லையா? மனதில் குழப்பமா? குடும்பத்தில் தீராத பிரச்சினைகளா? வாழ்க்கையில் எதிலும் முன்னேற்றம் கிடைக்கவில்லையா?
இதற்கெல்லாம் எளிய தீர்வு தரும் நாள்
மூன்றாம் பிறை சந்திர தரிசனம் செய்து கவலையில் இருந்து விடுபடுங்கள்.உங்களது அனைத்து மனக்குறைகளையும் மூன்றாம்பிறை சந்திர பகவானிடம் மனமுருகி சொல்லிவழிபடுங்கள்.பின்பு உங்கள் தாயாருக்கு பிடித்தமான உணவு வாங்கி கொடுத்து – – அவரிடம் ஆசீர்வாதம் பெறுங்கள்
உங்கள் ஊரில் மூன்றாம் பிறை சந்திரன் தெரியாவிடினும்
மேற்கண்ட நேரத்தில் அம்மாவிடம் ஆசீர்வாதம் பெறுவதும் அம்மா இல்லாதவர்கள் அருகில் உள்ள தாயார் அல்லது அம்பாள் சன்னிதியில் வழிபாடு செய்வதும் மிகப்பெரும் நன்மைகள் கிடைக்கும் அல்லது வயதான ஆதரவற்ற தாய்மார்கள் உள்ள காப்பகத்திற்கு சென்று அவர்களுக்கு உணவு தானம் அளித்து ஆசீர்வாதம் பெறுவதும்
அல்லது-
பெருமாளின் கண்களாக சந்திரன் உள்ளதால் அருகில் உள்ள பெருமாள் கோவில் சென்று அவரை மனமுருகி வழிபட்டு பின்பு
உணவு தானம் செய்வதும் மிகப்பெரும் நன்மைகள் தரும்
மேலும்-
ஏழை எளியவர்க்கு 3- குடை- வாங்கி தானம் செய்வது மிகுந்த நற்பலன்களை தரும்.
இன்னும்-
எளிய மனிதர்களுக்கு – கருப்பட்டி காப்பி வாங்கி தருவதும் – கருப்பட்டி சார்ந்த இனிப்புகள் வாங்கி தருவதும் -மிகுந்த நற்பலனை தரும்
சந்திர தரிசனம் செய்தபின்
கற்பகத்தினைக் கனகமால் வரையைக்
காம கோபனை கண்ணுதலானைக்
சொற்பதப் பொருள் இருளருத் தருளும்
தூய சோதியை வெண்ணை நல்லூரில்
அற்புத பழ ஆவணம் காட்டி
அடியனா வென்னை ஆளது கொண்ட
நற்பதத்தை நள்ளாறனை அமுதை
நாயினேன் மறந்து என் நினைக்கேனே
-என்ற பாடலை பாராயணம் செய்வதும்-மிக அற்புத பலன்களைத் தரும்
உங்களது நியாயமான வேண்டுதல்கள் கட்டாயம் நிறைவேறும்.