தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)
ஆயுள், ஜீவனம் ஆகியவற்றிற்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள சனி பகவான். இம்மாதம் முழுவதும் உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிக்கிறார். வருமானம் போதிய அளவிற்கு இருப்பதே இந்நிலை சுட்டிக்காட்டுகிறது.
செவ்வாயும், சாதகமாக உள்ளார். ஆவணி 9-ம் தேதி வரை சுக்கிரனாலும், பூமி காரகரான செவ்வாயினாலும் நன்மைகள் ஏற்படும். அதன் பிறகு, இவ்விரு கிரகங்களும் அனுகூலமில்லாத நிலைக்கு மாறிவிடுகின்றனர்.
ராசி நாதனாகிய குரு பகவான், ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிப்பது எதிர்பாராத செலவுகளை எடுத்துக்காட்டுகிறது. “ருண, ரோக, சத்ருஸ்தானமாகிய-ம் இடத்தில்குரு பகவான் சஞ்சரிக்கும்போது,கங்கை, யமுனை, சிந்து, துங்கபத்ரா, நர்மதா, கோதாவரி போன்ற ஜீவ நதிகளும் வற்றும்” என பூர்வ பாராசர்யம் போன்ற மிகப் புராதன ஜோதிட நூல்கள் விளக்கியுள்ளன. மிகவும் சிக்கனமாகவும், ஜாக்கிரதையாகவும் கைப்பணத்தைச் செலவு செய்ய வேண்டியமாதம் இது.
சனிபகவானும், செவ்வாயும் அனுகூலமாக வலம் வருவதால், தக்க தருணத்தில் உதவிகளும் எளிதில் கிட்டும்.
ரிஷப ராசியில் இணைந்துள்ள குரு செவ்வாய் ஆகியோரால் சிறு, சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால் குணம் கிடைக்கும்.
அர்த்தாஷ்டகத்தில் ராகு சஞ்சரிக்கும்போது, கடன் வாங்கக்கூடாது. அது வளரும் எனக் கூறுகின்றன, பழைமையான ஜோதிட கிரந்தங்கள்.
சனி பகவான் சுப பலம் பெற்றிருப்பதால், நிதி நிலைமை அனுகூலமாக உள்ளது. செலவுகள் ஏற்படும்போது, சனி பகவான் கைகொடுத்து உதவுகிறார்.
பரிகாரம் :
வியாழக்கிழமை தோறும் அருகில் இருக்கும் ஆலயத்தில் நெய் தீபம் ஏற்றி வருவது மிக சிறந்த பரிகாரமாகும்.