ஆவணி மாத ராசி பலன்கள் – கடக ராசி

Spread the love

கடக ராசி

குரு, சுக்கிரன் மற்றும் கேது ஆகியோர் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர்,இம்மாதம் முழுவதும்! ஆவணி 15-ம் தேதியிலிருந்து புதனும் அனுகூலமாக மாறுகிறார். பணவரவு தேவையான அளவிற்கு இருப்பதால், சிரமமின்றி குடும்ப நிர்வாகம் நடைபெறும்.

லாப ஸ்தானத்தில், குரு ,செவ்வாய் இணைந்திருப்பதால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். கேதுவின் சுப பலத்தினால் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். திருமணமான பெண்மணிகள் கருத்தரிப்பதற்கு உகந்த மாதம் இது.குடும்பச் சூழ்நிலை, மகிழ்ச்சியை அளிக்கும்.

கடக ராசி

அஷ்டமஸ்தானத்தில் சனி பகவான் வக்கிரகதியில் செல்வதால் உடல் நலனில் பின்னடைவு ஏற்படக்கூடும். கணவர்-மனைவியரிடையே பரஸ்பர அந்நியோன்யம் கூடும். வெளிநாட்டில் பணியாற்றி வரும் பிள்ளை அல்லது பெண்ணை பார்ப்பதற்காக வெளிநாடு சென்று வரும் யோகமும், அமைந்துள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

பரிகாரம் :

சனி மற்றும் ராகுவினால் ஏற்படும் தோஷ நிவர்த்திக்காக, சனிக்கிழமைகளில் அருகில் உள்ள திருக்கோயிலிலோ அல்லது, உங்கள் வீட்டு பூஜை அறையிலோ இரண்டு மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வரவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top