கும்பம்
(அவிட்டம் 3ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)
வரவும், செலவும் சமமாகவே இருக்கும். இருப்பினும், கடன் வாங்க வேண்டிய அவசியம் இராது. ஜென்ம ராசியில் சனி பகவான், வக்கிர கதியில் இருப்பதால்,ஏதாவதொரு உடல் உபாதை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
எதிர்காலத்தைப் பற்றிய கவலையும், அச்சமும் மனதை வருத்தும். அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். நெருங்கிய உறவினர்களிடையே பிரச்னைகள் ஏற்பட்டு, ஒற்றுமை பாதிக்கப்படும்.
வெளிநாட்டில் வேலைபார்த்துவரும் பெண் அல்லது பிள்ளையின் உத்தியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு, கவலையை அளிக்கும்.
திருமண முயற்சிகளில், ஏமாற்றமே மிஞ்சும். அடிக்கடி வெளியூர் செல்லவேண்டிய அவசியம் ஏற்படுவதால், உடலில் அசதியும், மனதில் சோர்வும் ஏற்படும். வீண் செலவுகளைத் தவிர்த்தல் அவசியம்.
பரிகாரம் :
திருப்பதி, பூவரசன்குப்பம், சூரியனார் கோயில், திருச்செந்தூர் ஆகிய திருத்தலங்கள் ஏதாவது ஒன்றில் நெய் தீபம் ஏற்றி வைத்து தரிசித்து விட்டு வருவது சக்தி வாய்ந்த பரிகாரமாகும்.