பானு சப்தமி
ஞாயிற்றுக்கிழமையும், சப்தமி திதியும் ஒன்று சேரும் நாள் தான் பானு சப்தமி .இந்த நாள் சூரிய கிரகண நாளுக்கு துல்லியமானது. அதாவது இன்றைய நாளில் நாம் செய்யும் பூஜைகள், மந்திர ஜெபங்கள், ஹோமங்கள், தானங்கள் போன்றவை சாதாரண நாட்களில் செய்வதால் ஏற்படும் புண்ணியத்தை காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிக புண்ணியத்தை தரக்கூடியவை.
சூரியனின் புதல்வரான சனீஸ்வர பகவான் ஈஸ்வர பட்டம் பெற்றவுடன் ஈஸ்வரனை வணங்கிவிட்டு, தினமும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பிரபஞ்சத்தை வலம் வரும் சூரியத் தேரை ஓட்டுகின்ற அருணன் ஞாயிறும் சப்தமியும் கூடும் பானுசப்தமி நாளில் சனிபகவான் தனது பெற்றோர்களான சாயா தேவி சமேத சூர்ய மூர்த்திக்கு பாத பூஜை செய்து சாஷ்டங்கமாக வீழ்ந்து வணங்கி பூஜித்தார்.ஆகவே நீங்கள் இன்று விரதம் இருந்து சூரியனை பூஜித்தால் ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி பாதிப்பு நீங்கி சனீஸ்வரன் அருள் புரிவார்.
சூரிய குலத்தைச் சேர்ந்த ஸ்ரீராமர், பானு சப்தமி நாட்களில் ஸ்ரீமன் சூரிய நாராயண விஷ்ணு ஸ்வாமிக்கான பூஜைகளைச் சூரிய மண்டலத்தில் விஸ்தாரமாக நடத்திப் பூஜிக்கின்றார். ஸ்ரீராமர் பானு சப்தமி நாட்களில், 108 சிவலிங்க மூர்த்திகளுக்கு பூஜைகளை நடத்தி ஸ்ரீமத்சூரிய நாராயண மூர்த்தியின் திருஅருளைப் பூவுலகிற்கு பெற்றுத் தருகிறார். ஸ்ரீராமர் பானு சப்தமி நாளில் சிவ பூஜை ஆற்றிய தலமே கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் 108 சிவாலயம் ஆகும். இங்கு உள்ள சூரிய மூர்த்தி மிகவும் சக்தி வாய்ந்தவர். பானு சுதாகரர் என்ற நாமம் தாங்கி தினமும் 108 சிவலிங்க பூஜைகளை ஆற்றி, நவகிரகங்களில் முக்கியமானவராக ஆகும் பேற்றைப் பெற்றார் .
பானு என்றால் சூரியன் பானுசப்தமி ஆயிரம் சூரியகிரணங்களுக்கு சமமான நாள். இன்று ஒரு நாள் பித்ரு தர்பணம் செய்வது 1000 சூரிய கிரகணம் முடிந்ததும் நாம் செய்த பித்ரு தர்பணத்திற்கு சமம்.
அரசியலுக்கும் அரசியல் பதவிகளுக்கும் காரக கிரகங்கள் சூரியன் சந்திரன் மற்றும் கால புருஷனுக்கு பத்தாம் வீட்டதிபதியான சனைஸ்வர பகவானும் ஆவர். அரசியலில் கொடிகட்டி பறக்க விரும்புபவர்கள் பானு சப்தமியில் சூரியனை வணங்க அரசியலில் அமோக வெற்றி உண்டாகும். ஒருவருடைய காலபுருஷ தத்துவப்படி பத்தாமிடம் இடம் தொழில் உத்யோக ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பத்தாமிடத்தின் அதிபதி பத்தில் இருந்து சூரியனின் பார்வை சேர்க்கை ஏற்பட்டால் அரசு வேலை கிடைக்கும். மேலும் கர்மகாரகன் என கூறப்படும் சனைஸ்வரன் அரசாங்க உத்யோக காரகன் சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தால் அரசு வேலை கிடைக்கும்.
ஜாதகத்தில் சூரியனுடன் சனி சேர்க்கை பெற்று இருந்தால் அரசு தொடர்பான வேலைகள், அரசு, அரசு சார்ந்த தொழில், அரசியல், தலைமை பதவி, கெளரவ பதவிகள் ஆகியவை அமைகின்றது. பானு சப்தமி நாளில் வணங்கினால் அரசாங்க வேலை விரைவில் கிடைக்கும்.
இன்று காலையில் புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்வதும், சூரிய நமஸ்காரம் செய்வதும், காயத்ரி மந்திரம் ஜெபிப்பதும், ஆதித்ய ஹிருதயம் போன்ற சூரிய ஸோஸ்திரம் பாராயணம் செய்வதும், கோதுமை மாவால் செய்த இனிப்பு தருவதும், தாமிரம் என்னும் செப்பு பாத்திரத்தில் வைத்த கோதுமையை தானம் செய்வதும், சூரியனின் அருளை பெற்று தரும்.