ஜூலை மாத ராசி பலன்கள் -2024

Spread the love

ஜூலை மாத ராசி பலன்கள் -2024

மேஷம்

உங்கள் ராசிக்கு 2ல் குரு, மாத முற்பாதியில் 3ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கக்கூடிய நிலை, எடுக்கும் முயற்சியில் வெற்றி ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வீடு தேடி வருவதற்கான யோகங்கள் உண்டு. உத்தியோசர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற முடியும்.

ஜூலை மாத ராசி பலன்கள்

பயணங்களால் ஒரு சில அனுகூல பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது.

பரிகாரம் : சரபேஸ்வரரையும் முருகரையும் வழிபாடு செய்யவும்.

ரிஷபம்

உங்கள் ராசிக்கு 11ல் ராகு, மாத பிற்பாதியில் 3ல் சூரியன் சஞ்சரிப்பதால் பல்வேறு நெருக்கடி இருந்தாலும், எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். தொழில் வியாபாரத்தில் முழு ஈடுபாடுடன் செயல்பட்டால் லாபங்களை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும்.

வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது.

ஜூலை மாத ராசி பலன்கள்

பரிகாரம் : முருக வழிபாடு மகாலட்சுமி வழிபாடு செய்வது நல்லது

மிதுனம்

உங்கள் ராசிக்கு 12ல் குரு ,ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும்.விட்டுக்கொடுத்து செல்வது,பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுக்கவேண்டியிருக்கும்.பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

தொழில்,வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்து கொள்வது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

ஜூலை மாத ராசி பலன்கள்

பரிகாரம் : சிவ வழிபாடு,தட்சிணாமூர்த்திக்கு தீபமேற்றுவது நல்லது.

கடகம்

லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதும், சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதும், 10, 11ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் பொருளாதாரரீதியாக ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.பேச்சில் நிதானத்தை கடைபிடித்தால் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது.

தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகி நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

ஜூலை மாத ராசி பலன்கள்

பரிகாரம் : ஆஞ்சநேயர் வழிபாடு சிவ வழிபாடு நல்லது

சிம்மம்

குரு, ராகு சாதகமற்று சஞ்சரித்தாலும், மாத முற்பாதியில் சூரியன் 11ல் சஞ்சரிப்பதாலும், 12ம் தேதி முதல் செவ்வாய் 10ல் சஞ்சரிப்பதாலும், எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகளால் மன நிம்மதி குறையும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது.

செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மை அடையும். வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டு கொண்டிருந்த உயர்வுகள் கிடைக்கும்.

ஜூலை மாத ராசி பலன்கள்

பரிகாரம் : அம்மனையும்,விநாயகரையும் வழிபாடு செய்வது நல்லது.

கன்னி

உங்கள் ராசிக்கு 9ல் குரு, 10, 11ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும். உற்றார்-உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கொடுக்கல்-வாங்கலில் இலாபகரமான பலன்கள் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். தொழில் வியாபார ரீதியாகவும் முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வினை அடைவார்கள்.

ஜூலை மாத ராசி பலன்கள்

பரிகாரம் : சரபேஸ்வரர் வழிபாடு செய்வது நல்லது.

துலாம்

உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 9, 10-ல் சூரியன், சுக்கிரன், 10, 11-ல் புதன் சஞ்சாரம் செய்வதால் பல்வேறு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. செவ்வாய் 7, 8-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. பணவரவுகள் தாராளமாக அமையும். குரு 8-ல் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது.

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். அரசுவழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்ப்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும்.

ஜூலை மாத ராசி பலன்கள்

பரிகாரம் : முருகரை வழிபடுவது, தட்சிணாமூரத்திக்கு தீபமேற்றுவது நல்லது.

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு 7-ல் குரு, 11-ல் கேது சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும்.

தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொண்டால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் விலகி நிம்மதி ஏற்படும். மாத முற்பாதியில் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது.

ஜூலை மாத ராசி பலன்கள்

பரிகாரம் :சிவனை வழிபடுவது உத்தமம்.

தனுசு

ஜென்ம ராசிக்கு 6-ல் குரு. 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு இருப்பது. நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது உத்தமம். வரும் 12-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும்.

பொருளாதாரநிலை ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதும், பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பதும் நல்லது. தொழில் வியாபாரத்தில் வேலையாட்கள் உதவியால் நெருக்கடிகளை சமாளிக்கமுடியும்.

ஜூலை மாத ராசி பலன்கள்

பரிகாரம் : விநாயகர் வழிபாடு செய்யவும்.

மகரம்

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 5-ல் குரு, மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் கடனில்லாத கன்னிய வாழ்க்கை அமையும்.

கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

ஜூலை மாத ராசி பலன்கள்

பரிகாரம் : அஷ்டலட்சுமி வழிபாடு, சனிபகவானுக்கு விரதம் இருப்பது உத்தமம்.

கும்பம்

உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் 3-ல் செவ்வாய் மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எந்தவித பிரச்சினையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். ராகு 2-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். பணவரவுகளில் சற்று நெருக்கடியான நிலை இருக்கும்.

கொடுக்கல் வாங்களில் கவனமாக செயல்படுவது உத்தமம். தொழில்ரீதியாக போட்டிகள் இருந்தாலும் அடையவேண்டிய இலக்கை அடைந்துவிடுவீர்கள். வெளியூர், வெளிநாடுகள்மூலம் நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும்.

ஜூலை மாத ராசி பலன்கள்

பரிகாரம் : துர்க்கை, ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது உத்தமம்.

மீனம்

உங்கள் ராசிக்கு 4, 5-ல் சுக்கிரன், 12-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து சென்றால் அனுகூலங்கள் உண்டாகும். மாத முற்பாதியில் சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும்.

சனி 12-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்பு, அசையும் அசையா சொத்துகள்ரீதியாக எதிர்பாராத வீண்செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைப்பளு அதிகரிக்கும்.

ஜூலை மாத ராசி பலன்கள்

பரிகாரம் : ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top