அக்டோபர் மாத ராசி பலன்கள்
மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் 3-ல் குரு சாரத்தில் சஞ்சரிக்கிறார். (புனர்பூசம்): 10-ஆமிடத்தைப் பார்க்கிறார் தொழில் இயக்கம் தடைப்படாது. 6-ஆமிடத்தைப் பார்ப்பதால் அவ்வப்போது திடீர் வைத்தியச் செலவுகளும் வந்து விலகும் வீண் விரயங்கள் ஏற்படலாம். மாத மத்தியில் 2-ல் இருக்கும் குரு வக்ரமடைகிறார் குடும்பத்தில் சில சலசலப்புகள் உண்டாகும்.
தனவரவு எதிர்பாதாதவிதமாக வந்து சேரும் அதேசமயம் ஏற்கெனவே குறிப்பிட்டபடி பொருளாதாரச் சிக்கலும் ஏற்படும். 11-ஆமிடத்து வக்ர சனி அவற்றை சமாளிக்கும் ஆற்றலைத் தருவார்.
மாதப் பிற்பாதியில் 7-ல் சஞ்சரிக்கும் சுக்கிரன் 8-ல் மறைந் தாலும், குரு பார்ப்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை உண்டாகும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப்போருக்கு சாதகமான தகவல்கள் கிட்டும்.
5-க்குடைய சூரியன் 6-ல் மறைவதால் உங்கள் எண்ணங்களில் சில நேரம் தடை தாமதமான பலன்களை சந்திக்கநேரும். குரு 5க்குடையவரை பார்ப்பதால் தாமதப்பட்டாலும் நிறைவேறும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் மாத மத்திவரை 6-ல் மறைவுபெற்றாலும் ஆட்சியாக இருக்கிறார்.(துலாம்). பொதுவாக ஆட்சி, உச்சம்பெற்ற கிரகங்களுக்கு மறைவுதோஷம் பாதிக்காது என்பது ஜோதிடப்பாடம். அதன்பிறகு 7-ல் மாறி (விருச்சிகம்) ராசியைப் பார்க்கிறார். 11-க்குடைய குருவும் ஜென்ம ராசியில் நின்று ராசிநாதனைப் பார்க்கிறார்.
காரிய அனுகூலம், செயல்பாடுகளில் திருப்தி போன்ற பலன்கள் ஏற்படும். 15-ஆம் தேதிமுதல் ஜென்ம குரு வக்ரம் பெறுகிறார். வக்ரத்தில் உக்ரபலம் தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் வகையிலும் சங்கடங்கள் தோன்றும் மனைவி அல்லது கணவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். இருவருக்கும் கருத்து வேறுபாடுகளும் நிலவும்.
2, 5-க்குடைய புதன் 6-ஆம் தேதிமுதல் 6-ஆமிடத்தில் மறைகிறார். தனவரவில் திருப்தியற்ற சூழல் நிலவலாம். 10-ல் வக்ரசனி தொழில் துறையினருக்கு கூட்டாளிவகையில் மனக்கசப்பு உண்டாகும்.
18-ஆம் தேதிமுதல் 4-க்குடைய சூரியன் 6-ல் நீசம், மறைவு. தகப்பனாருடன் மனக்கிலேசம் உருவாகலாம். எனினும் மனதிலுள்ள தைரியம் எதையும் சமாளிக்கும் ஆற்றல் தரும்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் மாதத் தொடக்கத்தில் 4-ல் ஆட்சி, உச்சம் பெற்றாலும், 6-ஆம் தேதிமுதல் 5-ல் மாறுகிறார் உங்கள் எண்ணங்களிலும் திட்டங்களிலும் நீங்கள் நினைத்த மாதிரியே செயல்பாடுகள் அமையும். 11-க்குடைய செவ்வாயும் ஜென்ம ராசியில் குரு சாரத்தில் சஞ்சாரம். பூமி, வீடு சம்பந்தப்பட்ட வகையில் அனுகூலம். சுப விரயம் போன்றவற்றை சந்திக்கலாம்.
12-ல் வக்ரம்பெறும் குருவும் அவற்றை நிறைவேற்றி வைப்பார். அதற்கான கடனுதவியும் கிடைக்கப்பெறும் 10-க்குடைய குரு 12-ல் வக்ரம் பெறுவதால் தொழில்துறையினருக்கு ஏற்ற – இறக்கம் மாறிமாறி வரும்.
தனியார் உத்தியோகத்தினருக்கு நற்பெயருக்கு இடமுண்டு என்றாலும், சற்று கவனமுடன் செயல்படுவது அவசியம்.
18-ஆம் தேதிமுதல் சூரியன் 5-ல் நீசம் பெறுகிறார். பூர்வீகம் அல்லது தகப்பனார் சொத்துவகையில் உடன்பிறந்தவர்களிடையே மோதல்களும் மனச்சங்கடமும் உருவாகும். விட்டுக் கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை என்ற கருத்தைப் புரிந்துகொண்டு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்துச் சென்றால் உறவுக்குள் பகை நிலவாது.
கடகம்
கடக ராசிக்கு அட்டமத்துச்சனி நடந்து கொண்டிருந்தாலும், சனி வக்ரகதியில் இயங்குகிறார். சில காரியங்களில் அனுகூலம் பெற்றாலும், பல காரியங்கள் இழுபறியாகவே இழுக்கும் திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செயல்படுத்த முடியவில்லை. ஒட்டிக்கு ரெட்டியாக- ஒரு வேலையை இருமுறை செய்ய வேண்டிய நிலைகளை சந்திக்கலாம். இதனால் கால நேர விரயம், தன விரயம் உண்டாகும். செலவுகளும் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கும். வீண் அலைச்சல், ஆதாயமற்றதாக அமையும்.
11-ல் இருக்கும் குரு 3-ஆமிடத்தைப் பார்ப்பதால் மனதைரியம் விலகாமல் எதிர்த்துப் போராடலாம். 15-ஆம் தேதிமுதல் குரு வக்ர கதியில் செயல்படுகிறார். உடன்பிறந்தவர்கள் வகையில் மனக்கசப்பு உண்டாகும். அல்லது அவர்கள்வகையில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் பற்றிய கவலையும் மனதை வருத்தும் கணவன்- மனைவி வகையில் ஒற்றுமை இருந்தாலும் மருத்துவச் செலவு களைத் தவிர்க்கமுடியாது.
9-க்குடைய குரு 10-க்குடைய செவ்வாய் சாரத்தில் சஞ்சரிப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் உங்களுக்குத் துணைபுரியும்.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் சூரியன் மாத முற்பாதிவரை 2-ல் சஞ்சாரம் குருவின் பார்வையைப் பெறுகிறார். ‘தெய்வத் தாலாகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும்’ என்ற குறளுக்கேற்ப உங்கள் முயற்சிகளுக் கேற்ப பலன்களையும் அனுபவிக்க நேரும்.
7-ல் உள்ள சனி வக்ரகதியில் செயல்பட்டு உங்கள் ராசியைப் பார்ப்பதால், மனைவிக்கோ அல்லது கணவருக்கோ உடல்நலத்தில் வைத்தியச் செலவுகள் உண்டாகும்.
2-ஆமிடத்தைப் பார்க்கும் குரு தனவரவுகளைத் தந்தாலும், அதற்கேற்ற செலவுகளையும் தருவார். சேமிப்புக்கு இடமிருக்காது.
9-க்குடைய செவ்வாய் 11-ல் நின்று 2-ஆமிடத்தைப் பார்க்கிறார்: 6-ஆமிடத்தையும் பார்க்கிறார். குடும்பத் தேவைகளுக்காகக் கடன் வாங்கும் சூழலும் ஏற்படும்.
3, 10-க்குடைய சுக்கிரன் 3-ல் ஆட்சி உத்தியோகத்தில் நற்பெயர் ஏற்படும். தொழில் துறையினர் தொழிலில் சில புதிய மாற்றங் களை உருவாக்கும் யுக்தியும் தென்படும். ஒருசிலர் புதிய வீடு வாங்கலாம் ஒருசிலர் பழைய வீட்டைப் பழுது பார்க்கும் செலவுகளையும் மேற்கொள்ளலாம் குடியிருப்பு மாற்றமும் உண்டாகும். ஒருசிலர் உத்தியோக மாற்றத்தையும் சந்திக்கலாம் அது பழையதை விட நல்ல மாற்றமாகவும் அமையும். மன சஞ்சலம் குறையும்.
கன்னி
கன்னி ராசிநாதன் புதன் தொடக்கத்தில் ஆட்சியாகவும் உச்சமாகவும் இருக்கிறார். (6-ஆம் தேதிவரை) 12-க்குடைய சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சாரம் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படலாம்.
2-ல் ஆட்சிபெற்ற சுக்கிரன் மேற்கூறிய வீண்விரயங்களை சமாளிக்கும்படியான வருமானத்தையும் வழங்குவார்.
6-ல் சனி வக்ரமாக இருப்பது ஒருவகையில் நன்மையே! கெட்ட கிரகம் கெட்ட இடத்தில் வக்ரம் பெறுவதால் சத்ரு தொல்லையிலிருந்து விமோசனம் பெறலாம். போட்டி, பொறாமைகளை சமாளிக்கலாம் அவர் 5-க்கும் உடையவர் என்பதால் 5-ஆமிடத்துப் பிரச்சினைகளான எண்ணம் திட்டம், பூர்வீகம் பிள்ளைகள் போன்றவற்றில் சங்கடங்கள் நேரலாம். ஒருசிலர் பிள்ளைகளின் வாழ்க்கை நிம்மதியற்ற நிலையில் இருப்பதால் உங்களது மனதிலும் நிம்மதிக் குறைவு ஏற்படலாம். ஒருசிலருக்கு ஒரே ஆண் பிள்ளையாக இருந்து, அவர் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வாழும் நிலைகளையும் எதிர்கொள்ளலாம்.
15-ஆம் தேதி முதல் 9-ல் உள்ள குரு வக்ரம் பெறுவதால் தந்தை அல்லது தந்தைவழி உறவினர்களால் பிரச்சினைகள் உண்டாகும் சொத்து சம்பந்தப்பட்ட வகையிலும் வில்லங்கம் விவகாரம் ஏற்படும்.
7-ல் உள்ள ராகு கணவன்- மனைவிக்குள் வாக்குவாதம் சச்சரவுகளைத் தருவார் அனுசரித்துச்செல்வது நல்லது.
துலாம்
துலா ராசிநாதன் சுக்கிரன் மாத முற்பாதிவரை ஜென்ம ராசியில் ஆட்சி 6-ஆம் தேதிமுதல் 12-க்குடைய புதனும் சேர்க்கை 2-க்குடைய செவ்வாய் 9-ல் நின்று 12-ஆமிடத்தைப் பார்க்கிறார் ஆக. ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ என்ற கதையாக ஓடிக்கொண்டிருக்கும். பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கத் திணறவேண்டிய நிலை! ராசிநாதன் ஆட்சி என்பதால் எப்படியோ உருட்டிப் புரட்டி சமாளித்து விடலாம்.
14-ஆம் தேதிமுதல் சுக்கிரன் 2-ல் மாறுகிறார். 15-ஆம் தேதிமுதல் 8-ல் உள்ள குரு வக்ரம் பெற்று சுக்கிரனைப் பார்க்கிறார். குடும்பத்திலும் சச்சரவு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போராட்டம் போன்றவற்றை சந்திக்கநேரும்.
உடன் பிறந்தவகையிலும் மனக்கசப்புகள், உறவுகளில் விரிசல் போன்றவையும் ஏற்படும். 4, 5-க்குடைய சனி வக்ரகதியில் செயல்படுவதால் உங்கள் திட்டங்களை சரிவர செய்ய இயலாது ‘ஒன்று நினைக்கின் அது ஒழிந்து மற்றொன்றாகும்; ஒன்று நினை யாமல் முன்வந்து நிற்கும் என்ற பாடலுக்கேற்ப நாம் ஒன்று நினைக்க, கிரகம் வேறொன்றாய் செயல்பட வைக்கும் எது எப்படிப் போனாலும் குருவருளும் திருவருளும் துணைநின்று உங்களை தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் வழிநடத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
விருச்சிகம்
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைந்தாலும், 2, 5-க்குடைய குருவின் சாரத்தில் (புனர்பூசம்) சஞ்சரிக்கிறார். 2-ஆமிடத்தையும் பார்க்கிறார். பொருளாதாரத்தில் பற்றாக்குறை விலகும். 12-ல் சுக்கிரன் ஆட்சி பெறுவதால், விரயமும் செலவும் ஒருபுறம் வந்து கொண்டிருந்தாலும் வரவும் வருவதால் பயப்படத் தேவையில்லை. 2-க்குடைய குரு ராசியைப் பார்ப்பதால் தைரியமாக செயல்படலாம்.
15-ஆம் தேதிமுதல் குரு 7-ல் வக்ரம் பெறுகிறார். கணவன் அல்லது மனைவிவகையில் தேகநலக்குறைவுகள் ஏற்படலாம். வைத்தியச்செலவுகளும் ஏற்படலாம். ஒருவருக்கொருவர் வார்த்தைகளில் நிதானத்தைக் கடை பிடிப்பது அவசியம். பணவரவு திருப்தி தரும். உடன் பிறந்தவர்கள் இடையே ஒற்றுமைக்குக் குறைவிருக்காது.
10-க்குடைய சூரியன் 11-ல் நிற்கிறார். உத்தியோகம், தொழில்வகையில் முன்னேற்றமான மாற்றங்களைச் செய்யலாம். 18-ஆம் தேதிக்குப்பிறகு சூரியன் 12-ல் மறைவு, நீசம். அக்காலகட்டம் மட்டும் சில தாமதங்கள் உண்டாகும். ஒருசிலருக்கு கால் அல்லது நரம்புத் தொந்தரவுகள் உண்டாகும். பூர்வபுண்ணிய சொத்துகள்வகையில் சுமூகமான தீர்வுகளுக்கு இடமுண்டு. திருமண முயற்சிகளைச் செய்யும் ஆண் – பெண்களுக்கு அவர்களின் எண்ணம் ஈடேறும்.
தனுசு
தனுசு ராசிநாதன் குரு 6-ல் மறைவுபெற்றாலும், 5-க்குடைய செவ்வாயின் சாரமான மிருகசீரிடத்தில் சஞ்சாரம். 12-ஆமிடம், 2-ஆமிடங்களைப் பார்க்கிறார். ஒருசிலர் வேலை நிமித்தமாக இடமாற்றத்தைச் சந்திக்கலாம் புது இடத்தில் வேலை செய்வதும், குடியிருப்பை ஏற்படுத்திக்கொள்வதுமான பலன்களை உண்டாகும்.
15-ஆம் தேதிமுதல் 6-ல் வக்ரம்பெறும் குருபகவான் விரயங்களை அதிகமாக்குவார். அந்த விரயங்களை சுபவிரயமாக மாற்றும் யுக்திகளையும் மேற்கொள்ளலாம். பூமி, மனை, வீடு போன்றவற்றில் ஈடுபட்டு சுபவிரயமாக மாற்றலாம். அல்லது புதிய வாகனம் வாங்கும் விரயமாக மாற்றலாம். குரு 4-ஆமிடத்துக்கும் அதிபதிதானே! எனவே மேற்கண்ட வீடு, வாகனவகையில் நன்மைகளைத் தருவார்.
ஜென்ம ராசிநாதன் 6-ல் மறைவது ஒருபுறம் கெடுதல்தான் என்றாலும், 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யலாம். அதேசமயம் சிலநேரம் கடன்வாங்கிப் பூர்த்தி செய்யும் அவசியமும் ஏற்படும்.
3-ல் சனி வக்ரம். சகோதரவகையில் சங்கடங்கள். மனவருத்தங்கள் உண்டாகும்.
18-ஆம் தேதிமுதல் 9-க்குடைய சூரியன் 11-ல் நீசமாகிறார். பூர்வீக சொத்து அல்லது தகப்பனார் சொத்து சம்பந்தமான பிரச்சினை கள் எழலாம். உறவுகள் இருப்பதும் விலகுவதும் உங்கள் முடிவு சார்ந்ததாக அமையும்.
மகரம்
மகர ராசிக்கு ஏழரைச்சனியின் கடைசிக்கூறு பாதச்சனி. 2-ல் வக்ரம். ராசிநாதன் மற்றும் 2-க்குடையவர் எனவே அவர் வக்ரகதியில் செயல்படுவதால், ஒன்று ஆரோக்கியத் தொல்லை அல்லது பொருளாதார நெருக்கடி, குடியிருப் பில் இடமாற்றம், கணவன்- மனைவிக்குள் சங்கடம் சச்சரவு போன்ற பலன்கள் ஏற்படும்.
4-க்குடைய செவ்வாய 12-ஆமிடத்தைப் பார்ப்பதால், வாடகை வீட்டில் குடியிருப்போர் ஒத்திவீட்டுக்குச் செல்லலாம். எழரைச்சனி ஆரம்பக் கட்டத்தில் சிரமங்களையும் போராட்டங்களையும் சந்தித்தவர்கள் சனியின் வக்ர நிவர்த்திக்குப்பிறகு ஆதாயங்களைச் சந்திக்கலாம். ஆரம்பத்தில் வசதி சௌகரியங்களைச் சந்தித்தவர்கள் இப்போது போராட்டமான வாழ்க்கையை சந்திக்க நேரும்.
15-ஆம் தேதிமுதல் குரு வக்ரமாகிறார். ஜென்ம ராசியையும், 11-ஆமிடத்தையும் பார்ப்பதால், தொழில்துறையில் ஓரளவு நற்பலனை எதிர்பார்க்கலாம். பிள்ளைகள்வகையில் நிலவிய பிரச்சினைகள் நல்ல தீர்வுக்கு வரும். 14-ஆம் தேதிமுதல் விருச்சிகத்திற்கு 10-க்குடைய சுக்கிரன் மாறுகிறார். அவரை குருவும் யார்க்கிறார்.
தொழிலில் ஏற்பட்ட போராட்டம். சிப்பந்திகள் பிரச்சினை விலகி தொழில் இயக்கம் நடைபெறும். ஆட்கள் சேர்க்கையும் ஏற்பட்டு வாக்கு நாணயத்தைக் காப்பாற்றலாம். புதிய அணுகுமுறை களையும் கையாளலாம்.
கும்பம்
உங்கள் ராசிநாதன் உங்கள் ராசியிலேயே வக்ரம்பெறுவதால், எதையும் திட்டமிட்டபடி செய்ய இயலாது. திடீரென சில மாற்றங்கள் ஏற்படும். ஆதாயமற்ற அலைச்சல்கள் வந்துசேரும். 10-க்குடைய செவ்வாய் 5-ல் திரிகோணம் பெறுவதால், வேலையில் தட்டுத்தடுமாறி நற்பெயர் எடுத்துவிடலாம். ஆனால் அதற்கான முயற்சிகள்தான் ஏராளம் காலநேர விரயத்தையும் சந்திக்க நேரும்.
9-க்குடைய சுக்கிரன் 10-ல் வருவதால் (14-ஆம் தேதிமுதல்) தர்மகர்மாதிபதி யோகம் ஒருபுறம் துணை நிற்கும் ஒரு ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகம் இருந்துவிட்டால் எப்படிப்பட்ட பிரச்சினைகளை யும் சமாளித்து வெற்றிபெறலாம் என்பது ஜோதிட விதி!
18-ஆம் தேதிமுதல் 9-ல் சூரியன் நீசம். அக்காலகட்டம் சற்று கவனமுடன் இருப்பது அவசியம் தந்தைக்கு உடல்நலக்குறைவால் மருத்துவச்செலவு, சந்திர தசை சந்திர புக்தி அல்லது ராகு- கேது தசாபுக்திகள் நடப்பவர்களுக்கு தனக்கோ அல்லது தந்தைக்கோ அறுவை சிகிச்சை ஏற்படலாம் அல்லது இழப்புகள், பொருட்சேதங்கள் உண்டாகலாம்.
2-ல் உள்ள ராகு குடும்பத்தில் நிம்மதியின்மையைத் தந்தாலும், மேற்கூறிய தர்மகர்மாதிபதி யோகத்தால் இவற்றையெல்லாம் எதிர்கொள்ளலாம். இளைய சகோதரத்தால் சச்சரவுகள் ஏற்படலாம்.
மீனம்
மீன ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி. அதிலும் சனி உங்கள் ராசிக்கு விரயாதிபதியும் லாபாதிபதியுமாவார் ஆக பொருளதாரத்தைப் பொருத்தவரையில் நிலையான வருமானம் சிலருக்கு பாதிக்கப்படலாம் ஏற்ற- இறக்கங்கள் உண்டாகலாம். ஜென்ம ராகு பலநேரம் உங்கள்மீது உங்களுக்கே சந்தேகங்களையும் நம்பிக்கைக் குறைவையும் உண்டாக்கலாம்.
3-ல் குரு 15-ஆம் தேதிமுதல் வக்ரம் பெறுவதால், தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் 14 ஆம் தேதிமுதல் சுக்கிரன் 9-ல் மாறுகிறார் குரு சுக்கிரன் இருவரும் நேரடிப் பார்வை திடீரென மாற்றங்களும் வந்து சேரும் அந்த மாற்றம் முன்னேற்றகரமான மாற்றமாகவும் அமையும். தொழில் மாற்றங்களைப் பற்றிய சிந்தனையும் உருவாகும்.
10-க்குடைய குரு 9-க்குடைய செவ்வாய் சாரத்திலும், 9-க்குடைய செவ்வாய் 10-க்குடைய குரு சாரத்திலும் சஞ்சரிப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். பூர்வீக வீட்டைப் பழுதுபார்க்கும் முயற்சிகளில் தாமதம் ஏற்பட்டாலும், வேலையை ஆரம்பித்தபின் தடையில்லாமல் நடந்தேறும் தகப்பனார் ஸ்தானத்தை குரு பார்ப்பதால், தகப்பனார் வழியில் நன்மையும் அனுகூலமும் எதிர்பார்க்கலாம். ஒருசிலருக்கு சொத்து சம்பந்தப்பட்ட சங்கடம் விலகி தீர்வு உண்டாகும்.