பரசுராம ஜெயந்தி – இன்றைய நாள் சிறப்புகள்-28.12.2023

Spread the love

பரசுராமரை நீதியை நிலைநாட்ட வந்து அவதாரமாக கருதுவார்கள். திருமால் தர்மத்தை நிலை நாட்ட எடுத்து அவதாரங்களில் ஆறாவது அவதாரம் பரசுராம அவதாரம்.

சப்தரிஷிகளில் ஒருவரான ஜமதக்கனி முனிவருக்கும், ரேணுகா தேவிக்கும் நான்காவது மகனாக அவதரித்தவர் பரசுராமர். “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்பதை நிலைநாட்டியவர். அதனாலேயே தன்னுடைய தந்தையால் ‘சிரஞ்சீவி’ வரத்தை பெற்றவர். அதற்கு முன் உள்ள எந்த அவதாரத்திலும் அவர் எந்த ஆயுதத்தையும் பிரயோகப்படுத்தவில்லை ஆனால் முதன்முதலாக பரசுராம அவதாரத்தில்தான் கோடாலி ஆயுதத்தை பிரயோகப்படுத்துகின்றனர்.

பரசுராமர் சிரஞ்சீவி என்பதால் இன்றைக்கும் கன்னியாகுமரிக்கு அருகில் மகேந்திர மலையில் தவம் செய்து கொண்டிருப்பதாக சொல்லுகின்றார்கள். எங்கெல்லாம் தர்மம் குறைந்து, நலிந்து மக்கள் துன்பப்படுகிறார்களோ அப்பொழுதெல்லாம் பரசுராம அவதாரம் நிகழும் என்பார்கள்.

கோடாலியை ஆயுதமாகக் கொண்ட பரசுராமர் தம்முடைய அவதார காலத்தில் முடிவில் கோடாரியை கடலில் வீசினார்அதன் வேகத்துக்கு பயந்து மேற்கு கடல் பின்வாங்கியதுஅப்படி உருவான புண்ணிய பூமி தான் ‘கேரள பூமி’ என்பார்கள்.

திருவள்ளம் ஸ்ரீ பரசுராம ஸ்வாமி கோயில் தென்னிந்தியாவின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாகு.ம் இது திருவனந்தபுரத்தின் திருவள்ளம் அருகே கரமணா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பரசுராமருக்கு இருக்கும் ஒரே கோயில் இது. பாண்டியன் காலத்தில் பிற்பகுதியில் 12 மற்றும் 13ஆம் நூற்றாண்டில் இந்த கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top