தமிழ் தேதி :மார்கழி 10/செவ்வாய்
ஆங்கில தேதி :டிசம்பர் -26
திதி : பௌர்ணமி நாளை விடியற்காலை 06:07 மணி வரை பின் பிரதமை
நட்சத்திரம்:மிருகசீரிடம் இரவு 10:57 மணி வரை பின் திருவாதிரை
யோகம்: சித்த /மரண யோகம்
கரணம் : பத்திரை
வார சூலை: வடக்கு
சந்திராஷ்டமம் : துலாம் ராசி
இன்றைய சிறப்புகள்
- “தத்தாத்ரேய ஜெயந்தி” -மும்மூர்த்திகளும் ஒன்றாய் இணைந்து அத்திரி மகரிஷியின் தர்மபத்தினியான அனுசூயை தேவிக்கு, தந்தாத்ரேயராக தரிசனம் அளித்த மகத்தான புண்ணிய தினம். மேலும் திரிபுர பைரவி ஜெயந்தி. திருமாலின் அவதாரங்களில் பத்தாவது அவதாரமாகிய கல்கி அவதாரத்திற்கு ஈடான, மகத்தான சக்தி வாய்ந்ததாகவும் ஒருவரின் ஜனன ஜாதகத்தில் லக்னத்தில் உண்டாகும் தோஷங்களை போக்க வல்லதான சக்தி மிகுந்த அவதாரமாகவும் போற்றி புகழப்படுகிறது.
- பௌர்ணமி ஆருத்ரா அபிஷேகம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
- திருநெல்வேலி நெல்லையப்பர் திருவீதி உலா.
- சங்கரன்கோவில் சிவபெருமான் ரதோற்சவம்.
- சிதம்பரம் ஆனந்தநடராஜமூர்த்தி, அம்பாள் சிவகாமி சுந்தரி ரதோற்சவம்.
- திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் ராபத்து உற்சவ சேவை. இரவு வெள்ளிரதத்தில் பவனி.
- திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் பஞ்சப்பிரகார உற்சவம்.
- வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை தலங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய கிரக நிலைகள்
ராகு காலம் ,எமகண்டம் மற்றும் சுப ஹோரை நல்ல நேரம்