பொதுவாகவே வளர்பிறை திருதியை திதி மிகவும் விசேஷமானது. மங்கலகரமானது. திருதியை தினத்தில் எது செய்தாலும் அது மிகச் சிறப்பாக விருத்தி அடையும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.
அதனால் தான் அக்ஷய திரிதியை அன்று நாம் பல பொருள்களை வாங்குகிறோம். பல செயல்களை தொடங்குகின்றோம். வாங்கிய பொருளும் தொடங்கிய செயலும் வளரச் செய்யும் கார்த்திகை மாதத்தின் இந்த திருதியை அபியோகத் திருதியை தினமாகும். சிலர் ரம்பா திருதியை என்றும் சொல்கிறார்கள்.
இன்று அம்பாள் படத்தை வைத்து பூஜித்து மாலையில் விளக்கேற்றி அம்பாளின் ஸ்தோத்திரங்களையும், பாடல்களையும் சொல்லி வழிபட வேண்டும்.
இந்த வழிபாடு யோக பலன்களை விருத்தி செய்யும், தொழில் துறை மேம்படும். வியாபார விருத்தி உண்டாகும். திடீர் தலைமை பதவி போன்ற பதவி உயர்வுகள் கிடைக்கும்.