இன்றைய நாள் சிறப்புகள் – செல்வ வளத்தை கொடுக்கும் புதன் மஹா பிரதோஷம் (13.11.2024)

Spread the love

புதன் மஹா பிரதோஷம்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள்…புதன் என்பது செல்வத்தை அள்ளித்தரக்கூடிய ஒரு பொன்னான நாள். அந்த நாளில் யார் ஒருவர் விரதம் இருந்து பிரதோஷ வழிபாடு செய்கிறார்களோ, அவர்களின் வாழ்வில் செல்வம் பெருகும்.

செல்வம் என்பது பணம் மட்டுமல்ல.அறிவுச் செல்வம், ஆரோக்கியம், குழந்தை செல்வம், திருமண பாக்கியம், குடும்ப ஒற்றுமை என 16 வகையான செல்வங்கள் இருக்கின்றன. அந்த 16 செல்வங்களைப் பெற புதன் கிழமைகளில் வரும் பிரதோஷ வழிபாடு தான் சிறந்த நாள். புதன் கிழமையில் வரும் பிரதோஷ விரதம் இருப்பவர்கள், செவ்வாய் கிழமை மாலையிலேயே நன்றாக குளித்து சிவ ஆலயத்திற்கு சென்றோ அல்லது வீட்டிலிருந்தோ சிவனை வழிபட்டு

புதன்  மஹா பிரதோஷம்



என்ற மந்திரத்தை கிழக்கு திசை நோக்கி அமர்ந்து 108 முறை உச்சரிக்க வேண்டும். பின்னர் இரவு எளிய உணவு எடுத்து உறங்கிவிடுங்கள் புதன் கிழமை காலையில் எழுந்து குளித்து, அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு செருப்பு போடாமல் நடந்து சென்று சிவ பெருமானையும், நந்தி பகவானையும் வழிபட்டு, நான் புதன் கிழமை பிரதோஷ விரதம் இருக்கின்றேன், என் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை செல்வ தடைகளும் காணாமல் போக வேண்டும் என வேண்டி கோயிலில் அமர்ந்து 108 முறை ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை கொடிமரத்திற்கு அருகில் அல்லது, தல விருச்சத்திற்கு அருகில் அல்லது நந்தி பகவானுக்கு அருகில் அமர்ந்து உச்சரிக்கவும்.

மீண்டும் 4 மணிக்கு சிவ ஆலத்திற்கு சென்று நந்தி பகவானுக்கு அருகம்புல் மாலை அணிவித்தால் தொழில் தடைகள் நீங்கும். சிவனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.பிரதோஷம் நடக்கக்கூடிய மாலை 4:30 மணி முதல் 6:30 மணிவரை, உலகில் உள்ள அத்தனை தேவதைகள், தெய்வங்களும், நேர்மறை எண்ணம் கொண்ட சக்திகள், சித்தர்கள் அங்கு கூடி சிவபெருமானை பார்ப்பதாக ஐதீகம்.அந்த நேரத்தில் நாம் கோயிலில் எந்த வேலையாவது செய்தால், அவர்களின் பார்வை நம் மேல் படும், நம் வாழ்வின் பிரச்சினைகள், பாவங்கள் போக்குவார்கள்.

அன்று கோயிலில் தயிர் சாதம் வழங்குபவர்களுக்கு, நீண்ட நாள் காரியம் நிறைவேறும்.அங்கு இருக்கும் காமதேனு பசுவிற்கு 4 மஞ்சள் வாழைப்பழம் கொடுக்கவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top