ஆவணி மாத ராசி பலன்கள்- சிம்ம ராசி

சிம்மம்

(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் வரை)

வரவைவிட, செலவுகளே அதிகமாக இருக்கும். அஷ்டம் ராசியில், ராகு அமர்ந்திருப்பதால், ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம். களத்திர ஸ்தானத்தில், சனி பகவான் சஞ்சரிப்பதால், மனைவியின் உடல்நலன் பாதிக்கப்படக்கூடும்.

மாதத்தின் கடைசி வாரத்தில், பணப் பற்றாக்குறையினால், பிறர் உதவியையும் நாடவேண்டிய அவசியம் உருவாகும். விவாக முயற்சிகளில், தடங்கல்கள் ஏற்படும். ஜென்ம ராசியில் உலவும் சூரியனால், அடிக்கடி மனதில் “டென்ஷன்” ஏற்படும். நெருங்கிய உறவினர்களிடையே ஒற்றுமை குறையும். ஒருசிலருக்கு, வீடுமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

ஆவணி மாத ராசி பலன்கள்

ராகுவின் நிலை, இரவுநேரங்களில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க அறிவுறுத்துகிறது. உங்களுக்குச் சம்பந்தமில்லாத, பிறருடைய பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வயோதிகப் பெரியோர்கள் குளியல் அறையில் நடக்கும் போது அதிஜாக்கிரதையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

பரிகாரம் :

ஒருமுறை சூரியனார் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வைத்து தரிசித்து விட்டு வந்தால் போதும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top