கன்னி
(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)
பெரும்பான்மையான கிரகங்கள் உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர், இம்மாதம் முழுவதும். சூரியன், செவ்வாய், ராகு ஆகிய மூவர் மட்டும் உங்களுக்கு ஆதரவாக இல்லை. மற்ற கிரகங்களினால், பல நன்மைகள் ஏற்படவுள்ளன. வருமானம் திருப்திகரமாக உள்ளது. எதிர்பாராத பண வரவிற்கும் சாத்தியக்கூறு உள்ளது.
பாக்கிய ஸ்தானத்தில் குரு அமர்ந்து, ராசியையும், ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய மகரத்தையும் பார்ப்பதால், குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

ராகுவின் நிலையினால், – மனைவியின் ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படும். திருமண முயற்சிகள் கைகூடும். வேலைக்கு முயற்சித்துவரும் பெண் அல்லது பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்கும்.
கும்ப ராசியில், சனி பகவான் சுப பலம் பெற்றிருப்பதால். பழைய கடன்களை அடைப்பதற்கு வழி பிறக்கும். சப்தமஸ்தானத்தில் (7) ராகு நிலை கொண்டிருப்பதால் மனைவியின் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம். குரு, சுக்கிரன் ஆகியோரின் சஞ்சார நிலைகளினால் பலருக்கு வசதியான வீட்டிற்கு மாற்றம் ஏற்படும்.
பரிகாரம் :
ஒருமுறை திருநாகேஸ்வரம் சென்று வருவது நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும்.