துலாம்
(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)
லாப ஸ்தானத்தில் நிலைகொண்டுள்ள சூரியனும், சுக்கிரனும் உங்கள் பணத் தேவைகளை கவனித்துக் கொள்வதால், நிதித் தட்டுப்பாடு இருப்பதற்கு வாய்ப்பில்லை. இவர்கள் இருவருக்கு உதவியாக, ராகுவும் அனுகூல நிலையில் சஞ்சரிக்கிறார். திட்டமிட்டு செலவு செய்தால், எதிர்காலத்திற்கென்று சிறிது சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.
பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானத்தில்,சனி பகவான் அமர்ந்திருப்பதால், குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம் ஆகியவற்றில் கவனமாக இருத்தல் நல்லது.
ராகுவின் நிலை, எதிர்பாராத இடங்களிலிருந்து பண உதவி கிடைப்பதற்கு உதவிகரமாக உள்ளது. புதிய வஸ்திரங்கள், ஆபரணங்கள் வாங்கும் யோகமும் அமைந்துள்ளதை சுப பலம் பெற்றுள்ள சுக்கிரனின் நிலை எடுத்துக்காட்டுகிறது. விலையுயர்ந்த பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
குருவின் நிலை, பொருட்கள் களவு போகும் வாய்ப்பு உள்ளதை எடுத்துக்காட்டுகிறது.
பரிகாரம்:
வைத்தீஸ்வரர் கோயில் தரிசனம் செவ்வாயின் தோஷத்தை அடியோடு போக்கும். வியாழக்கிழமைகளில் அருகில் இருக்கும் கோவில்களில் நெய் தீபம் ஏற்றி வருவது குருவின் அஷ்டமஸ்தான தோஷத்தை போக்கும்.