ஞாயிற்றுக்கிழமை |
சூரியனின் ஆதிக்கம் நிறைந்தது ஞாயிற்றுக்கிழமை.நீங்கள் பிறந்தது ஞாயிற்றுக்கிழமை என்றால் சிறந்த செயல்வீரர்களாக இருப்பீர்கள். எதிர்பாராத விதமாக சில விஷயங்களில் உங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும். ஞாயிறன்று பிறந்த அன்பர்கள் கடின வேலைகளையும் எளிதாகவும் திறமையாகவும் முடித்து சாதனை படைப்பார்கள். சொன்னதைச் செய்வார்கள். உற்றார்-உறவினருக்கு உதவும் குணம் கொண்டவர். இவரது தலைமையின் கீழ் பலபேர் பணிபுரிவார்கள்.
- வெள்ளிக்கிழமை ராசியாக இருக்கும்
- 19, 28, 37, 45 வயதுகளில் ஏற்றம் உண்டாகும்.
திங்கள் கிழமை |
திங்கள்கிழமை பிறந்தவர்கள் சாந்தகுணம் கொண்டவர்கள். அன்பும், இனிமையும் நிறைந்திருக்கும். எதிரிகளையும் நண்பர்களாக பாவிப்பர். தர்ம நியாயங்களை கடைபிடிப்பதில் உறுதி உள்ளவர். இவர்களுக்கு சொந்த தொழில் கைகொடுக்கும்.
- திங்கள்கிழமை அதிஷ்டம் தரும்
- 20, 29, 38, 47, 56 இந்த வயதில் ஏற்றமும் மாற்றமும் உண்டாகும்.

செவ்வாய் கிழமை |
செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் நல்லவர்களுக்கு நல்லவர். பலரிடமும் ஆலோசனை கேட்பார்கள் ஆனால் தாங்கள் நினைத்ததை செயல்படுத்துவார்கள். நியாய தர்மங்களுக்கு கட்டுப்பட்டவர். மற்றவர்களின் விமர்சனத்தை பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
- வியாழக்கிழமை அதிர்ஷ்டம் தரும்.
- 18, 27 ,36, 45, 54 ஆகிய வயதுகளில் நல்ல திருப்பங்களை காண்பார்கள்.
புதன் கிழமை |
புதன்கிழமையில் பிறந்தவர்கள் நல்ல அறிவாளியாக இருப்பார்கள். ரகசியம் காப்பதிலும், மற்றவர்களின் மனதை படிப்பதிலும் வல்லவர். அதற்கு ஏற்ப செயல் பட்டு எல்லோரையும் வியக்க வைப்பார்கள். பல துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள். மருத்துவர், நீதிபதி, பொறியாளர், எழுத்தாளர், என்று உயர்ந்த நிலையில் வாழ்வார்கள். ஜோதிடம், ஓவியம் ஆகியவற்றிலும் திறமை இருக்கும்.
- குருவாரமாகிய வியாழன் இவர்களுக்கு யோகம் தரும்.
- 23, 32,41, 50 ஆகிய வயதுகளின் நல்ல முன்னேற்றம் உண்டு.
வியாழக்கிழமை |
வியாழக்கிழமை பிறந்தவர்கள் நீதி-தர்மத்துக்கு பக்கபலமாக விளங்குவர். கெட்டவர்களையும் நல்வழிக்கு திருப்புவதற்கு பாடுபடுவர். இவர்களால் உறவுகள் ஏற்றம் பெறுவார்கள். எந்த துறையில் ஈடுபட்டாலும் முன்னேற்றம் அடைவார்.
- வெள்ளிக்கிழமை அதிர்ஷ்ட நாள் ஆகும்
- 21, 30, 48, 57, 66 இந்த வயதுகளில் முன்னேற்றம் காண்பார்கள்.

வெள்ளிக்கிழமை |
வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள் கருவிலேயே திருவானவர்கள். பேச்சாளையே மற்றவர்களை தன் வயப்படுத்துவர். தம்மை ஏற்காதவர்களை புறக்கணிப்பார்கள். எவ்வித வேலையாக இருப்பினும் மற்றவர்களின் துணையுடன் எளிதில் செய்து முடிப்பார்கள். வாழ்க்கை துணைவரின் ஆதரவு அதிகம் உண்டு.
- திங்கள் கிழமை யோகம் தரும்
- ஏற்றம் தரும் வயது காலங்கள் 22, 26, 31, 35, 44, 53
சனி கிழமை |
சனிக்கிழமை பிறந்தவர்கள் மிகவும் பொறுமைசாலிகள். ஒரு வேலையை முடித்துவிட்டுத்தான் அடுத்த வேலையில் கையில் எடுப்பார்கள். ஆன்மீக மகான்கள், அறிஞர்களிடம் பற்று உண்டு. இவர்கள் மற்றவர்களின் விஷயத்தில் தலையிட மாட்டார்கள்.
- அதிர்ஷ்ட கிழமை வியாழன்
- 22, 26, 31, 35, 41, 50, 53 ,58 இந்த வயதுகளில் மாற்றமும் ஏற்றமும் உண்டு .