மேஷ ராசி காரகத்துவங்கள்

மேஷ ராசி

அடிப்படை அம்சங்கள்

வைராக்கியம், தேசநலன், நிறைவேற்றுதல், துணிச்சல், கீழ்படிதல்,
வெளிப்படைத்தன்மை, ஒழுங்குமுறை, ஏற்றுக்கொள்ளுதல், ஆன்மிகம்,
சுய மரியாதை, எதிலும் முன்னோடியாக இருத்தல்.

நேர்மறை குணங்கள்

தைரியம் ,தொழில்முனைவு ஆற்றல்

எதிர்மறை குணங்கள்

சுயநல தீர்மானம் ,நிதானமின்மை

மேஷ ராசி
இருப்பிடம்

முட்செடிகள், மலை, சிறு காடு, போர்க்களம், நெருப்புள்ள பகுதி, கள்ளர்கள்
வாழும் பகுதி, பகலில் காடு, இரவில் ஊர், சூடான பிரதேசங்களில், கிராமங்கள்.

தொழில்

பொறியியல் துறை, ராணுவம், காவல், விவசாயம், நெருப்பு சம்பந்தப்
பட்டவை, காடு சார்ந்த, உலைக்கூடம், எந்திரங்கள் செய்யுமிடம்,பூமிசார்ந்த,மது,சூதாட்டம்,புராதனபொருட்கள், , பெயிண்டிங்,
சுரங்கம், ஆராய்ச்சித்துறை, எரி பொருட்கள், தாதுப் பொருட்கள், சித்திரம், லேத்,
சிற்பவேலை, பவளம், சிற்றுண்டி சாலை, மாந்திரீகம், வாதமிடல், சிகப்பு நிற பொருட்கள் வியாபாரம்,உரம் சம்பந்தப்பட்டவை, சர்க்கரை ஆலைக்குத் தேவையான
மூலப் பொருட்கள், டிரான்ஸ்போர்ட்டுக்கு தேவையான உதிரி பாகங்கள்,
சிகையலங்காரம், திரவப் பொருட்கள், தன் சரீரத்தைவைத்து செய்யும்
தொழில், நீச தொழில்கள்.

உணவு வகைகள்

கீரை வகைகள், வெங்காயம், உருளை கிழங்கு, பரங்கி காய், வெள்ளரிக்காய்,
கோஸ், பீன்ஸ், அவரைக்காய், எலுமிச்சம், வால்நெட், ஆப்பிள்.

நோய்கள்

காய்ச்சல், தொற்று நோய், சுவாசக் கோளாறு, சிறுநீர் கல் அடைப்பு, ரத்த
சோகை, ஏதாவது ஒரு கட்டத்தில் ஒரு சிறிய ஆபரேஷன் செய்ய வேண்டிய
நிலை உருவாகும், தலைவலி, நரம்பு மண்டலம் சம்பந்தமான நோய்,
ஆழ்நிலை மயக்கம், நினைவிழந்த நிலை, மூளை நோய், மூளையில்
ரத்தப்போக்கு, தூக்கமின்மை, வீக்கமுண்டாகும் நோய்கள், தலை முகம்
பாதிக்கும் வலி, முகப்பரு, மூக்கில் வளரும் நீர்ச்சதை,
ஒரு பக்கத் தலைவலி, தலைசுற்றல், கிறுகிறுப்பு, மூளைக் காய்ச்சல், வட்டமான
இள வழுக்கை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top