இன்றைய நவீன காலகட்டத்தில் முகூர்த்த நாள் எப்படி குறிக்க வேண்டும்? என்கின்ற சந்தேகம் மக்களிடையே உள்ளது. மேலும் அந்த முகூர்த்த நாளை குறிப்பதற்கு அருகில் இருக்கும் புரோகிதர் மற்றும் ஜோதிடரை நாடும் வழக்கம் இன்றும் உள்ளது. அப்படிப்பட்ட முகூர்த்த நாளை எப்படி எளிய முறையில் குறிக்கலாம் என்பதை பற்றி விரிவாக கொடுத்துள்ளேன்.
எப்படி முகூர்த்தம் வைக்க வேண்டும்? என்பதற்கு இந்த எளிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள். பஞ்சாங்கத்தை வைத்து நாள் குறியுங்கள்( அல்லது) குறித்த நாள் குறித்து சரிபார்க்கவும் இந்த டிப்ஸ் உதவும்.
- இரண்டு அமாவாசை இரண்டு பௌர்ணமி உடைய மல மாதங்களில் திருமணம் வைக்க கூடாது.
- வளர்பிறை நாளாக இருக்க வேண்டும்.
- புதன், வியாழன், வெள்ளி மிகச் சிறப்பான நாட்கள்.
- தமிழ் மாதங்களில் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி சிறப்பான மாதங்கள்.
- திதிகளில் துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, சுக்லதிரயோதசி சிறந்த திதிகள்.
- லக்னங்களில் மேஷம், விருச்சிகம், மகரம், கும்பம் தவிர மற்ற லக்கினங்கள் சிறந்தது.
- முகூர்த்த லக்னத்திற்கு ஏழாம் இடம் எந்த கிரகமும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.
- ரோகிணி, மிருகசீரிடம், மகம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்தம், ஸ்வாதி, அனுஷம், மூலம், ரேவதி போன்ற நட்சத்திரங்கள் நலம்.
- அக்னி நட்சத்திர காலங்கள், மிருத்யுபஞ்சகம், கசர யோகம் போன்ற காலங்களை தவிர்க்க வேண்டும்.
- அமாவாசை,பௌர்ணமி கூடாது.
- இருவரின் பிறந்த தேதியும், கிழமையும் இருக்கக் கூடாது.
- அன்றைய சந்திர ராசி இருவருக்கும் எட்டாவது ராசியாக இருக்கக் கூடாது.
- சுக்கிரன், குரு போன்ற கிரகங்கள் திருமணம் லக்னத்திற்கும், மணமக்களின் ராசிக்கும் ஆறில் இருக்கக் கூடாது.
இவைகள் எல்லாம் அனுசரித்து நாள் குறிப்பது நல்லது