ரிஷப ராசி காரகத்துவங்கள்

ரிஷப ராசி

அடிப்படை அம்சங்கள்

பண்புடைமை,கருணை, இரக்கம், காரணம் அறிதல், அக்கறை, பெருந்தன்மை, அஹிம்சை, நல்ல துணையாக இருத்தல், சகிப்புத்தன்மை, உறுதிப்பாடு, நல்லிணக்கம், ஒத்துபோகக்கூடிய எதார்த்தமான பண்புகள்.

நேர்மறை குணங்கள்

பொறுமை,சாமார்த்தியம்.

எதிர்மறை குணங்கள்

அதீத வாதம், சொந்த கருத்துக்கள் அல்லது ஆசைகள் உறுதியாக குணங்கள் இருத்தல்.

ரிஷப ராசி
இருப்பிடம்

மலை அடிவாரம், மாடு கட்டும் கூடம், விவசாய நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள்.

தொழில்

சினிமா, கல்யாண மண்டபம், கதாகாலட்சேபம், நாடகமேடை, கவர்ச்சி பேச்சு,
கதை கட்டுரை எழுதுதல், ஆடியோ வீடியோ,டெக்ஸ்டைல்ஸ், ரேடியோ, டி.வி., பொழுது போக்கு சாதனம், ஓவியம், டூரிஸ்ட் நிறுவனம், தங்கும் விடுதி, உணவுவகைகள், ஓட்டல், கருவூலம், கால்நடை, பண்ணை பராமரிப்பு வெண்மைநிற பொருட்கள்,வாசனைப்பொருட்கள், வெள்ளிப் பொருட்கள், நகைக்கடை, ஸவீட்ஸ்டால்,பெண்களுக்குத் சாதனங்கள், வெளிநாட்டுத்தொடர்பு, கரும்பு, எரிபொருளுக்குத் தேவையான உபகரணங்கள், கட்டில், மெத்தை,நூதன பொருட்கள்,வாடகைக்கு விடுவது, விஞ்ஞான ஆராய்ச்சி, பங்கு பத்திரம், கனி வகைகள்,கூட்டுறவுத்துறை, பல் வைத்தியம், பல் பொருள் அங்காடி, பல்வைத்தியம்,அழகு சாதனப் பொருட்கள், தூதுவர்கள், பத்திரிக்கைத் துறை, விளம்பரத் துறை, பைனான்ஸ், ஸ்டேஷனரி போன்றவை.

உணவு வகைகள்

பயிறு வகைகள், கேரட்,பசலை கீரை,கிழங்கு வகைகள் வெள்ளரிக்காய்,சிவப்பு ழுள்ளங்கி, சீஸ், ஆப்பிள், பாதாம், தேங்காய்.

நோய்கள்

ஜலதோஷம், பற்கள் சிதைவு, தோல் நோய், சீதபேதி, காசநோய், விஷக்காய்ச்சல், வறண்ட தொண்டை, கழுத்துச் சுரப்பிகளின் வீக்கம், டான்சில் வீக்கத்தால் சீழ் கட்டிப் போதல், மூச்சுக்குழாய் அடைப்பு, பொன்னுக்கு வீங்கி (எச்சில் ஊறும் கோளங்களில் கோளாறு), தைராய்டு சுரப்பிகளில் குறைபாடு, தொண்டை அடைப்பான் நோய், புலன்களின் தசைகளைத் தாக்கும் நோய், தலையில் உண்டாகும் தசை முண்டு, காற்றுக்குழாயில் சீழ் பிடித்தல், கண்டமாலை (கழுத்தில் ஏற்படும் வீக்கம்), நெஞ்சு வலி போன்றவை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top