வீண் செலவை குறைத்து வருமானத்தை பெருக்கும் கல் உப்பு பரிகாரம் !

கல் உப்பு பரிகாரம்

மனிதனின் தேவைகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கிறது. அன்றி ஒருநாளும் குறைவது கிடையாது. அதிலும் இந்த நம்முடைய பண தேவை பற்றி சொல்லவே தேவையில்லை. எவ்வளவு சம்பாதித்தாலும் போதாத ஒரு நிலைதான் அனைத்து இடங்களிலும் நிலவுகிறது. அதுமட்டுமின்றி வருமானத்தை மீறிய செலவுகளும், வீண்விரயங்களும் இன்னொரு புறம் நம்மை இழுத்து செல்கிறது. இவற்றில் இருந்து எல்லாம் தப்பித்து நாம் சம்பாதிக்கும் பணம் பல மடங்காக பெருகவும், பெருகிய பணம் வீட்டில் இன்னும் பல மடங்காக பெருகவும் சில பரிகாரங்கள் உண்டு. .

எந்த ஒரு தேவையும் பூர்த்தி செய்து கொள்ள பணம் ஒரு கருவியாக செயல்படுகிறது. அதை எவ்வளவு சம்பாதிக்கிறோமோ அவ்வளவு செலவும் ஆகிறது. அப்படியானால் நாம் வருமானத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் அது சரிதான், ஆனால் அதை எப்படி பெறுவது நம்மால் முடிந்த மட்டும் பாடுபடலாம் நம் படும் பாட்டுக்கு பலன் கிடைக்க வேண்டும் அல்லவா! அதை இந்த பரிகாரங்கள் செய்து கொடுக்கும்.

முதலில் சம்பளம் கைக்கு வந்தவுடன் நாம் செய்யும் செலவு மிக முக்கியமானது. அது மாத சம்பளமாக இருக்கட்டும் அல்லது தினக்கூலியாக இருப்பினும் நம்முடைய வருமானம் கையில் பணம் வந்தவுடன் நாம் செய்யும் செலவு மிகவும் முக்கியம். ஆகையால் தான் நம் முன்னோர்கள் சம்பளம் வாங்கியவுடன் சில பொருட்களை வாங்க சொல்லி நமக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள். அது பணத்தையும் நம்முடைய செல்வ நிலையையும் உயர்த்தும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.

 கல் உப்பு பரிகாரம்

அந்த வகையில் முதலிடத்தில் உள்ளது ‘கல் உப்புதான்’ சம்பளம் வாங்கியவுடன் முதலில் வாங்க வேண்டியது ‘கல் உப்புதான்’. தினமும் கூலி வாங்குபவர்கள் தினமும் கல் உப்பு வாங்க முடியுமா? என்று கேட்கலாம். அப்படி வாங்க முடியாது தான், அதற்காகத்தான் வெள்ளிக்கிழமைகளில் கட்டாயம் கல் உப்பு வாங்க வேண்டும். மாத சம்பளம் வாங்குபவர்கள் கூட வெள்ளிக்கிழமை என்று கல்லுப்பை வாங்கி பூஜையறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். அப்படி பூஜை செய்த கல்லுப்பை சமையல் அறையில் மண்பானை அல்லது பீங்கான் இரண்டில் ஏதாவது ஒன்றில் உங்கள் இரண்டு கைகளால் எடுத்து அதில் போட வேண்டும். ஆண்களை விட பெண்கள் இப்படி கைகளால் கல்லுப்பை போடுவது மிகவும் சிறந்தது. ஏனெனில் கல் உப்பானது மகாலட்சுமி தாயாரின் அம்சமாகவே கருதப்படுகிறது.

ஒவ்வொரு வீட்டின் பெண்களும் மகாலட்சுமி தான்! இதை கேட்பதற்கு மிகவும் எளிய ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் இதை செய்ய செய்ய இதற்கான பலன் பல மடங்காக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இப்படி கைகளால் கல்லுப்பை எடுத்து நாம் சமையலுக்கு பயன்படுத்தும் போது நம்முடைய பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நம்முடைய கைகளில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. கல் உப்பிலும் தாயார் வாசம் உண்டு. இவையெல்லாம் ஒன்றிணைவது நம்முடைய வீட்டின் செல்வ நிலை பல மடங்கு பெருகும். அத்துடன் நீங்கள் செய்யும் முதல் செலவே இந்த கல்லுப்பு வாங்குவதற்காக இருக்கும்போது வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகரிக்கும்.

சம்பளம் வாங்கும் வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு அதிகரிக்கும். தொழில் செய்வதாக இருந்தால் அதன் லாபம் அதிகரிக்கும். அல்லது இவற்றையெல்லாம் பெருக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் நமக்கு கிடைக்கும். நம்முடைய முன்னோர்கள் நமக்கு சொல்லித் தந்த முறைகளும் இந்த பரிகாரங்களும் கேட்கும் போது என்ன இவ்வளவுதானா என்பது போல இருக்கும். செய்து பார்த்தால் தான் அதன் பலன் புரியும். இந்த பரிகாரமும் அதுபோல ஒன்றுதான். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top