அக்ஷய நவமி
அக்ஷய த்ருதியை எல்லோருக்கும் தெரியும். ஆனால் அக்ஷய நவமி தெரியுமோ?.யாருக்கும் தெரியாது.காரணம் எந்த நகை கடையும் விளம்பரம் செய்யவில்லை.
- அக்ஷய த்ருதியை கிருத யுக ஆரம்ப நாள்.
- பகீரதன் கங்கையை பூமிக்கு கொண்டு வந்த நாள்.
- அக்ஷய நவமி திரேதா யுகம் ஆரம்ப நாள்,
- அகஸ்தியர் காவேரியை பூமிக்கு கொண்டு வந்த நாள்.
- ஹரிச்சந்திரன் காவேரி ஸ்நானம் செய்து அனைத்து பாபங்களையும் போக்கிக் கொண்டு மீண்டும் சக்ரவர்த்தியான நாள்.
- மாமன்னன் இராஜராஜ சோழன் சதயத் திருவிழா பிறந்த நாள்
- தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டி அரியணை ஏறிய நாள்.
- கிருஷ்ணர் விருந்தாவனத்தை விட்டு வெளியேறினார்
- அக்ரூரருக்கு கிருஷ்ணர் நாராயண தரிசனம் கொடுத்தார்
- கிருஷ்ணர் மதுராவிற்குள் நுழைந்தார்
- கிருஷ்ணன் ஒரு திமிர்பிடித்த சலவைக்காரனைக் கொன்றான்
- கிருஷ்ணருக்கு ஆடைகளை மாற்ற ஒரு தையல்காரருக்கு வாய்ப்பு கிடைத்தது
- கிருஷ்ணர் ஒரு மாலை விற்பவரான சுதாமாவின் வீட்டிற்குச் சென்று அவரது மாலைகளை ஏற்றுக்கொண்டார்
- ஒரு குடிசைப் பெண்மணி குப்ஜா கிருஷ்ணரின் உடலில் சந்தனத்தை பூசினார்
- கிருஷ்ணர் கம்சனின் வில்லை முறித்தார்.
- வழக்கமாக மதுரா மற்றும் பிருந்தாவனம் (பிருந்தாவனம் மற்றும் மதுராவை பரிக்கிரமா செய்தல்) சுற்றி வருவது 1000 ஆண்டு பழமையான பாரம்பரியம்.
- கிருஷ்ணரின் தரிசனத்தைப் பெறவும், அவரை அனுபவிக்கவும் அவரிடம் சரணடைவோம்.
துலா மாசம் (ஐப்பசி) காவேரி ஸ்நானம் எவ்வளவு விசேஷம் தெரியுமோ? அதேபோல இந்த அக்ஷய நவமி தீபாவளிக்கு பிறகு வரும் நவமியாகும். இந்நாளில் செய்யும் ஸ்நானம், தர்பணம், ஜபம், பூஜைகள் தேன், வஸ்திரங்கள், அரிசி, வாழைப்பழம், பால், தயிர், தாம்பூலம், கோதானம் மற்றும் அன்னதானம், ஆகியவை அக்ஷயமான பலனைக் கொடுக்கும்.
அன்றய தினம் யாரொருவர் வேளாண்மை தொழில் செய்பவருக்கு (விவசாயிக்கு) எருது (காளை மாடு) கொடுக்கிறாரோ..அவர். அனைத்து பாபங்களும் விலக்கி கோலோகத்தை அடைவார்,
- நெல் விதையை தானமாக கொடுப்பவருக்கு திருமண தடைகள் நீங்கி வம்ச விருத்தி ஏற்படும்,
- அன்னதானம் செய்பவர் அனைத்தையும் அடைவார். (காவேரி மாஹாத்மியம்- கூறுகிறது )
- இன்று பூசணிக்காய் தானம் செய்ய திருஷ்டியும் ,பாபமும் விலகும்.