துளசி விவாகம்
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். இன்று பெருமாளுக்குரிய புதன்கிழமை. பெருமாளுக்கு அதிக விருப்பமானது பத்ரம் எனப்படும் துளசி. துளசி செடி வளரும் வீட்டிலோ அருகிலோ தீய சக்திகள் நெருங்குவதில்லை. தினமும் கிருஷ்ணனை அர்ச்சித்த ஒரு துண்டு துளசி தளத்தை சுவீகரித்தவன் நோயற்றவன், தீர்க்காயுள் கொண்டவன், பாவம் விலகியவன்.
துளசியால் கிருஷ்ணனுக்கு பூஜை செய்தவனின் முன்னோர்களும் கூட பாவத்திலிருந்து விடுதலை பெறுவார்கள். பெரும் புண்ணியம் தரும் துளசி விவாகம் அல்லது துளசி கல்யாணம் இன்று அனுசரிக்க வேண்டும். இதில் சாளக்கிரமம் அல்லது நெல்லி மர கிளையுடன் துளசிக்கு சம்பிரதையா திருமணம் நடைபெறும். துளசி மகிமையை பற்றியும் துளசிக்கும் பெருமாளுக்கும் நடந்த துளசி விவாகம் பற்றியும் பத்ம புராணத்தில் செய்திகள் உண்டு.