திருவரங்கத்திலும் மற்ற எல்லா பெருமாள் கோயில்களிலும் ‘அத்யயன உற்சவம்’ இன்று தொடக்கம். மார்கழி மாதத்தின் சிறப்புகளில் ஒன்று வைகுண்ட ஏகாதசி.
வைகுண்ட ஏகாதசிக்கு முன்னும் பின்னும் பகல்பத்து ,இராப்பத்து உற்சவங்கள் பெருமாள் ஆலயங்களில் நடைபெறும். இதற்கு ‘திருஅத்யயன உற்சவம்’ என்று பெயர்.
ஸ்ரீரங்கத்திலும் இந்த உற்சவம் நடைபெறும் 21 நாட்களும் விழாக்கோலம் கொண்டிருக்கும். அதன் தொடக்கம்தான் நேற்று திருநெடுந்தாண்டகம், ‘திருநெடுந்தாண்டகம்’ என்பது திருமங்கை ஆழ்வாரின் ஆறாவது பிரபந்தம்.
இதை வைணவர்கள் திருநெடுந்தாண்டக சாஸ்திரம் என்பார்கள். இந்தப் பிரபந்தத்தை வைத்துத்தான் பராசரபட்டர் வேதாந்தியான மாதவாச்சாரியரை நஞ்ஜீயர் என்கிற ஆச்சாரியாராக மாற்றினார்.
.திருமங்கை ஆழ்வார் இந்த திருநெடுந்தாண்டகத்தை பெருமாள் முன் பாடி அதற்கு சன்மானமாக தான் திருவாய்மொழி உற்சவத்தை நடத்த பெருமாளிடம் அனுமதி பெற்றார் என்பது வரலாறு. இந்த உற்சவத்தின் ஒரு பகுதி தான் வைகுண்ட ஏகாதசி.