ராஜ ராஜ சோழன் சதய விழா
மாமன்னர் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்று கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இதனை முன்னிட்டு ஆண்டுதோறும் தஞ்சை மாவட்ட நிர்வாகம் ராஜ ராஜனின் பிறந்த நட்சத்திர தினத்தை ‘சதய விழா’ என்ற பெயரில் இரண்டு தினங்கள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039 வது சதய விழா மங்கல இசை மற்றும் திருமுறை விண்ணப்பத்துடன் துவங்கும்..
சைவர்கள் போற்றும் திருமுறைகளை மீட்டு தந்தவர் ராஜராஜன் தஞ்சை கோயில் வடிதெடுக்கவும் அங்கு வழிபாடுகள் நடக்கவும் ஒரு பொன்காசு கொடுத்தவர்களை கூட மறக்காமல் கல்வெட்டில் பொரித்து வைத்துள்ளார். ராஜராஜ சோழன், பொன்னியின் செல்வன் என்பது உள்ளிட்ட 40 க்கும் அதிகமான சிறப்புப் பெயர்களால் போற்றப்படுபவர் ராஜராஜன். அதனால் தான் அவரது புகழ் தமிழர்கள் வாழும் இடமெல்லாம் போற்றப்படுகிறது. இவர் பதவியேற்ற 985 ஆம் ஆண்டு அடிப்படையாகக் கொண்டே சதய விழா கொண்டாடப்படுகின்றது. அந்த விழா இன்று.