விசுவாவசு வருட பலன்கள்
ஸ்ரீ மங்களகரமான குரோதி வருஷம் பங்குனி மாதம் 30ந் தேதி (13-04-2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 3.21 மணிக்கு சூரிய உதயாதி 53:20 நாழிகைக்கு கும்ப லக்னம் மகர நவாம்சையில் மங்களகரமான விசுவாவசு வருஷம் பிறக்கிறது.

இலக்கினாதிபதி சனி பகவான் தனஸ்தானமாகிய இரண்டாமிடத்தில் புதன், சுக்கிரன், இராகு இந்த கிரஹங்களுடன் சேர்ந்திருப்பதால் இவ்வருடம் கடல் சார்ந்த வணிகம் விருத்தியடையும். கச்சத்தீவு மீண்டும் இந்தியாவிற்குப் பெற சட்டபூர்வமான வழிவகைகள் நடக்கும். வடமாநிலங்களிலும் வடதுருவப் பகுதிகளிலும் பனிப்பாறை உருகுதல், இமயமலைப் பிரதேசங்களில் நிலச்சரிவுகள் நிலச்சரிவுகள், பெருவெள்ளம் ஆகியவை உண்டாகும். பனிப்பாறைகளிலிருந்து புது வைரஸ் உருவாகி உலகை அச்சுறுத்தும். பொது மக்களுக்குக் கண்கள் மற்றும் கால்களில் புதுவிதமாக நீர் சம்மந்தப்பட்ட நோய்கள் உருவாகும்.

இரண்டாமிடம் புதன், சுக்கிரன், சனி, ராகு சேர்ந்து இரண்டாமிடத்திற்குரிய குரு 4மிடம் சஞ்சாரம் செய்வதால் தொழில்துறை ஓரளவு விருத்தியடையும். தாராள பணப்புழக்கம் உண்டு. வருடக் கடைசியில் மத்திய மந்திரி சபையில் பெரும் மாற்றங்கள் நிகழும்.

மூன்றாமிடம் சூரியன் இருந்து மூன்றாமிடத்திற்குரிய செவ்வாய் 6மிடம் நீசம் பெறுவதால் ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சியடையும். மக்களுக்கு கடன் சுமை அதிகமாகி பொதுமக்கள் தைரியமிழப்பார்கள். தெய்வ காரியங்களில் தடை ஏற்படும்.
நான்காமிடம் குரு பகவான் இருந்து சனியாலும் ராகுவாலும் பார்க்கப்படுவதால் நட்பு நாடுகள் பகை நாடுகளாக உருவாகும். திருமண நிகழ்ச்சிகள் அதிகம் நடக்கும். பணவருவாயில் இருந்த தடைகள் நீங்கும்.
ஐந்தாமிடத்திற்குரிய புதன் இரண்டாமிடம் நீச்சம் பெறுவதால் குழந்தைப் பிறப்பு விகிதங்கள் குறையும் அபார்ஷன் அதிகமாகும்.
ஆறாமிடம் செவ்வாய் நீசம் பெற்று சந்திரன் 9மிடம் சகடயோகத்தில் இருப்பதால், பொதுமக்களுக்கு இரத்தத்தில் புதுவகை நோய்கள் உருவாகும்.
ஏழாமிடத்திற்குரிய சூரியன் மூன்றாமிடம் சஞ்சாரம் செய்வதால் கூட்டு வியாபாரம் செய்பவர்கள் விருத்தி அடைவர். விவாகரத்து எண்ணிக்கைகள் குறையும்.
எட்டாமிடம் கேது இருந்து குரு, சுக்கிரன், புதன், சனி, ராகு இவர்களால் பார்க்கப்படுவதால் நீர் நிலைகளில் விபத்துக்கள் அதிகமாகும்.
ஒன்பதாமிடம் சந்திரன் இருந்து செவ்வாயால் பார்க்கப்படுவதால் மக்களுக்குத் தண்ணீரில் கெண்டம் உண்டு. மேலும் கன்னிப் பெண்களுக்கு விபத்து உண்டு.
பத்தாமிடம் குருபார்வை பெற்று 10மிடத்திற்குரிய செவ்வாய் நீசம் பெறுவதால் நாட்டில் தொழில் துறையில் வளர்ச்சி அதிகம் இருந்தாலும் கடன் சுமை அதிகரிக்கும்.
பதினொன்றாமிடம் சனி பார்வை பெற்று பதினொன்றாமிடத்திற்குரிய குரு நான்காமிடம் சஞ்சாரம் செய்வதால் நாட்டு மக்களுக்குத் தொழில்துறையில் லாபம் குறையும்.
பன்னிரெண்டாமிடத்திற்குரிய சனி இரண்டாமிடம் இருந்து 12மிடம் குரு பார்வை பெறுவதால் மக்கள் அதிகச் செலவாளிகளாக இருப்பார்கள். செலவுகளுக்கு ஏற்ற வருமானத்தையும் பெறுவார்கள்.
பொதுவாக இவ்வருடம் குருபகவான் ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய 3 ராசிகளில் பிரவேசம் சய்வதால் உலகில் மூன்றில் ஒரு பங்கு மனிதர்கள் அதிகம் பாதிப்படைவார்கள். இயற்கைப் யாழிவினாலும், தொற்று நோயினாலும், போரினாலும் அதிகமான பொதுமக்கள் இறப்பார்கள். ரச்னைகளிலிருந்து விடுபட விரும்பும் மக்கள் அவரவர்கள் குல தெய்வத்திற்கோ இஷ்ட தெய்வத்திற்கோ சரிசி, வெல்லம், நல்லெண்ணெய், நெய் இவைகளை களை அவரவர்கள் அவரவர்கள் சக்திக்கேற்ப சக்திக்கேற்ப வாங்கிக் கொடுப்பதும் நர்மையாக வாழ்க்கையை வாழ்வதும் பொது நன்மைக்காக யாகங்கள் செய்வதும் நல்லது.