‘கருட பஞ்சமி’ அன்று பெருமாள் கோயில்களில் நடைபெறும் வழிபாட்டில் கலந்துகொண்டால் நல்ல வாழ்க்கை கிடைக்கும். இதே நாள் ‘நாகபஞ்சமி’ நாளாகவும் இருப்பதால் நாகர்களின் தலைவனான ஆதிசேஷனுக்கு பூஜை செய்வதும் நடைபெறும்.
எதிரெதிர் விஷயங்களான கருடன், பாம்பு இந்த இரண்டையும் ஒரே பஞ்சமி நாளில் வணங்குகின்ற பொழுது, பகை கொண்ட உள்ளங்கள் மாறும். நட்பு பிறக்கும். குடும்பத்தில் சந்தோ ஷம், குதூகலம் நிலவும். கருத்து வேறுபாடுகள் மறையும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் இந்த தினத்தில் அவசியம் நாக பஞ்சமி மற்றும் கருட பஞ்சமி பூஜைகளில் கலந்துகொள்வதால் நட்பு பலப்பட்டு கூட்டுத்தொழில் விருத்தியாகும்.
கருட பஞ்சமி அன்று கருடனை வணங்குவதன் மூலமாக கண் திருஷ்டி மற்றும் துஷ்ட சக்திகளின் ஆதிக்கம் குறையும். ஐஸ்வர்யம் பெருகும். இன்று நாகபூஜை செய்து கருடனுக்கு நெய்தீபம் போடுவது நாக தோஷங்களை நீக்கும். திருமணத் தடைகளை அகற்றும்.